தமிழின் முதன்மையான நவீன எழுத்தாளர்களில் ஒருவரான சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகம் குறித்த ஒரு சிறப்பு மலரை பதாகை இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் முப்பதாண்டுகளாக எழுதிவருபவர். குறைத்துச் சொல்லுதலின் கலை என அவருடைய ஆக்கங்களைப் பற்றிச் சொல்லமுடியும். சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். குறைவாக எழுதியும் தமிழிலக்கியத்தில் தவிர்க்கமுடியாத இடத்தில் இருப்பவர்
சுரேஷ் பிரதீப், ஜிஃப்ரி ஹஸன் முதலிய இளைய படைப்பாளிகளும் க.மோகனரங்கன், சுகுமாரன், ந.ஜயபாஸ்கரன் போன்ற முந்தைய தலைமுறை படைப்பாளிகளும் எழுதியிருக்கும் இந்த மலர் ஒரு முக்கியமான இலக்கியத் தொகுப்பு