நேற்று வெண்முரசில் எழுதிய கடுவெளியின் காட்சி மீண்டபின் அச்சத்தை, தனிமையை அளித்தது. இரக்கமில்லாத பிரம்மாண்டம் என்ற சொல் துரத்திவந்தபடியே இருந்தது. மீள்வதற்காக இரவில் யூடியூபில் தேடி இந்தப் பாடலைக் கண்டேன். மீண்டும் மீண்டும் இரண்டுநாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது
பத்மினியின் நடனம் இயல்பான உணர்வுகளுடன் மிகவிரைவான அசைவுகளுடன் உள்ளத்தைக் கவர்கிறது. கதக் சாயல்கொண்ட சுழற்சிகள். துள்ளலான இசை.
அதுவே இதுவும். முடிவிலாதது கரிய அழகனாக வந்து கையைப்பிடித்து இழுக்கிறது
நீல வண்ணக் கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே – மோகனக்
கண்ணா என் கையைத் தொடாதே!
தன்னந் தனியான என்னைத்
துன்புறுத்தல் ஆகுமோ?
நான் உனக்குச் சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ?
கண்ணைக் கண்ணைக் காட்டி என்னை
வம்பு செய்யல் ஆகுமோ?
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன் – கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)
மல்லி என் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்!
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்!
கள்ளனே உன்னை எல்லோரும்,
பொல்ல பிள்ளை என்று சொல்லி – கண்டபடி பேசுவார்!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே – கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)
படம்: மல்லிகா
குரல்: பி.சுசீலா
வரிகள்: ஏ.மருதகாசி
இசை: டி.ஆர்.பாப்பா
https://youtu.be/-2-HEDfTZss
Music Director – Hemant Kumar