கவிதை மொழியாக்கம் -விவாதம்

ocp

கவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்

கவிதை மொழியாக்கம் -சீனு

வெ.ஸ்ரீராம்

கவிதை மொழியாக்கம் -கடிதம்

கவிதை மொழியாக்கம் -எதிர்வினை

கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்

அன்பின் ஜெ,

ஆக்டோவியா  பாஸ்  எழுதிய “நீரின் சாவி”  என்ற கவிதையின்  மொழியாக்கம் தொடர்பான எதிர்வினைகளை வாசித்தேன்.  குறிப்பாக அதில் வரும்  பிரெஞ்சு வாசகத்திற்கு அணுக்கமானபொருளை  தமிழில்  எடுத்து வர வேண்டும்  என்ற முனைப்பை  என்னால் உணர முடிகிறது . ஆனால்,  அந்தக்  கவிதையில்  அதை விட முக்கியமாக எனக்குத்  தோன்றுவது,  அதற்கும் முன்றைய  தொடர் – Above and  below/great  gulfs of  calm.

இயற்கையின்  பெருவெளியை  சுருக்கித் திருத்துவது  கவிதையின்  ஆடுகளம்.மெல்லிசையில் ஓடும்  வலியின்  இழை போல,  கவிதைளில்   மனித நேசத்தின்   தொனி  இழைந்து   வருகிறது.  இக்கவிதை   புற  உலகிற்கும் அக உலகிற்கும்  இடையே  நிகழும்  இசைவான  மாற்றத்தைக்குறிக்கிறது.

வைப்புமுறையை  கூர்ந்து வாசித்தால்,  இமயம் உருகி  பெருக்கெடுக்கும் கங்கையைப்  போல்பெண்ணின் முலை  குழைந்து  பெருக்கெடுக்கும்  காமம்  சொல்லப்படுகிறது.  யானைத் தந்தத்திலிருந்து    புறா வரை,  சிகரங்களிலிருந்து  கோபுரம் வரை சலிக்கச் சலிக்க உவமைகளை  குவித்தாயிற்று .  ஆனால், கவிதையை மலை =  முலை, ஆறு = காமம்  என்று கணக்காகபிரிக்க  முடிந்தால்  அது மூன்றாம்  தர திரைப்பாடல்  வரிசையில்  இடம் பெற  நேரிடும் . கவிதைநிகழும்  கணம்  என்னளவில்  வேறொன்றாய் இருக்கிறது.

பூசந்தியை  போல இரு பேருலகங்களை  இணைத்து இங்கு நிலைப்பது  அந்தப் பேரமைதி.  மலை,  ஆறு  என்று பூகோளச் சொற்கள் வருவதால், gulf  வளைகுடாவாக  திரிக்கப்பட்டுவிட்டது . இங்கு வரும் gulf  முப்புரத்திலும்    நிலம் சூழ  கடலுள் வாய் திறக்கும்  வளைகுடா இல்லை. மேலும் கீழும்,  விண்ணிற்கும்  மண்ணிற்கும்   ஓங்கி உலகலக்கும்  அமைதியின் பெரும்பிளவை. வளைகுடா  என்றசொல் கவிஞன்  எதிர்நோக்கும்    வெளி சார் இணக்கத்தை  (spatial relevance)  குலைக்கிறது . கால்பாதாளத்தில்  சிகை மேகத்திலும்    உரச முப்பரிமாணத்தில்,  அலகிடமுடியாத,  த்ரிவிக்கிரம அமைதி.   அந்த அமைதி  அன்றிரவு  ஒரே  சமயத்தில்  கட்டற்றதாகவும்,   கை  நனைக்க  நல்லதாகவும்   மடைதிறக்கிறது.

புள்ளியாகவும்  முடிவிலியாகவும்  விரியும் வெளியை  அவதானிக்கும் ஆக்டோவியா  பாஸின்”வெளி” கவிதையின்  மொழியாக்கம்-

 

வெளி

 

வெளி

ஊடில்லை, ஆதியில்லை, அந்தமில்லை

இடையறாது தன்னைத் தாணுண்டும், மீள் தோற்றுவித்தும்,

பெருநீர்ச்சுழல் வெளி

உயரத்திலிருந்து வீழும்

வெளி

துலக்கச்சரிவைப் பிளந்து

இரவின் சிறகத்திலிருந்து

தொங்கவிடப்பட்டது

புகைக் கோலில் மலரும்

பளிங்குப்பாறைகளின் கருந்தோட்டங்கள்

காற்றில் வெடித்துத் தெறிக்கும் வெண்பூங்காக்கள்

திறக்கும் ஒற்றை வெளி

அல்லிவட்டம்

வெளியில் வெளி

கரையும்

எதுவும் எங்குமிலாதிருக்கும்

மர்ம சங்கமங்களின் நகர்.

 

(above, below –  மேலும் கீழுமாக இல்லது  ஆதி அந்தமாக  அர்த்தப்படுத்தி  உள்ளேன் . impalpable – தொட்டுஉணர முடியாதது  , கரத்தில், வசப்படுத்த முடியாதது,  கவிதையின்  ஓட்டத்திற்கு  மர்மம்பொருந்துவதாக  பட்டது )

 

Space – Octavio Paz

Space

No center, no above, no below

Ceaselessly devouring and engendering itself

Whirlpool space

And drop into height

Spaces

Clarities steeply cut

Suspended

By the night’s flank

Black gardens of rock crystal

Flowering on a rod of smoke

White gardens exploding in the air

Space

One space opening up

Corolla

And dissolving

Space in space

All is nowhere

Place of impalpable nuptials.

 

பார்க்கவி சந்திரசேகரன்

முந்தைய கட்டுரைபனிமனிதன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆயுதம் செய்தல்