பனிமனிதன் -கடிதங்கள்

pani-manidhan-38363

அன்புள்ள ஜெ,

 

இரண்டு வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவில் நண்பர் திருமலைராஜன் இல்லத்தில்  உங்களை சந்தித்தேன். பிறகு வேலை மாற்றலாகி  இப்போது டெக்சாஸில் வசிக்கிறேன்.

 

கடந்த ஆண்டு இந்தியா சென்ற போது “பனி மனிதன்” வாங்கி வந்து என் மகள்களுக்கு தினம் ஒரு பகுதி என்று இரவில் படித்து கதையை சொன்னேன். நேற்று என் மகள் பள்ளியில் இருந்து திரும்பி வந்த பின், “அப்பா, நாங்கள் “Big Foot” பற்றி படித்தோம். அதற்கு இந்தியாவில் பெயர் ‘யதி’ என்றார்கள். எனக்கு பனி மனிதன் புத்தகத்தில் கிம் மற்றும் பௌத்த துறவிகள் யதி பற்றி சொன்னது அனைத்தும் நினைவுக்கு வந்தது” என்றாள்.

 

உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அனிமல் பிளானட் தொலைக்காட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் “Big Foot” தென்பட்டதாக சொன்ன ஒரு சுட்டியை இத்துடன் இணைத்துள்ளேன்.

 

http://www.animalplanet.com/tv-shows/finding-bigfoot/lists/10-bigfoot-sightings-last-5-years/

 

-வாசு

 

அன்புள்ள ஜெ

 

பனிமனிதன் நாவலை என் மகளுக்கு வாசித்துக்காண்பித்தேன். காண்பித்துக்கொண்டே இருந்தேன் என்று சொல்லவேண்டும். மாதக்கணக்கில். ஒருவழியாக அவள் அடுத்த புத்தகத்துக்குள் சென்றாள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவளிடம் பேசும்போது அவள் மனிதர்கள் வீடுகட்டாமல். விவசாயம் செய்யாமல்  குடும்பமாக ஆகாமல் வாழ்ந்திருந்தால் வாழ்க்கையின் இன்னொரு சாத்தியக்கூறு வெளிவந்திருக்குமா என்று கேட்டாள்.  Yuval Noah எழுதிய Sapiensநூலை அவளிடம் பள்ளியில் சுருக்கிச் சொல்லியிருக்கிறார்கள். அவள் அதிலிருந்து சிந்தித்ததாகச் சொன்னாள். அந்தச் சிந்தனையை தூண்டிவிட்டது பனிமனிதன். அதை மீண்டும் வாசிக்கவேண்டும் என்று சொன்னாள். ஆங்கிலம்தான் அவளுக்குத்தெரியும். நான் வாசிக்கமாட்டேன் என்று சொன்னேன். அவளே மெல்லமெல்ல வாசித்தாள். அந்நாவல் கற்பனையில் எப்படியெல்லாம் விரிவடைகிறது என்று சொன்னாள். நான் வாசித்தது பயனுள்ளதாயிற்று என்று தெரிந்துகொண்டேன்

 

மகாலிங்கம்

 

பனிமனிதன் – விமர்சனங்கள்

பனிமனிதன் வாங்க 

பனிமனிதன் மின்னூல்

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-24
அடுத்த கட்டுரைகவிதை மொழியாக்கம் -விவாதம்