கவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்

ve,ni

கவிதை மொழியாக்கம் -சீனு

வெ.ஸ்ரீராம்

கவிதை மொழியாக்கம் -கடிதம்

கவிதை மொழியாக்கம் -எதிர்வினை

கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நண்பர் கடலூர் சீனுவின் எதிர்வினைகளையும் உங்களுடைய விளக்கத்தையும் வாசித்தேன். இவை சார்ந்து சொல்ல, சில இருக்கின்றன. அவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரேசமயத்தில் அந்தரங்கமானதாகவும் பொதுவானதாகவும் இருந்துகொண்டிருக்கும் இருப்பு கவிதையினுடையது. கிட்டத்தட்ட கவிதையும் நம்மைப் போலத்தான். அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கவிதையின் வாசிப்பு அல்லது வரிவரியாக எடுத்துவைத்து விளக்குவது என்பது ஒருபடித்தானதாகவே இருக்கமுடியும் என்பது என் எண்ணம். கவிதையை எதிலும் பொருத்திக் கொள்ளமுடியாது. அது நோக்கமற்றது. நோக்கங்களுக்கு முதுகைக்காட்டக்கூடியது.

பல வருடங்களுக்கு முன்பு வாசித்த கவிதை நாளையோ இன்றோ வாசிக்கையில் அது இன்னொன்றாக மாறியிருக்கும். கவிதைக்குள் அன்று ஒரு சொல்லால் சுட்டப்பட்ட ஒன்று, இன்று இன்னொன்றை சுட்டுவது. எங்கேயிருந்து கவிதைக்கு இத்தன்மை வந்துசேர்கிறது?
ஹெராக்ளிட்டஸின் “ஒரே நதியெனினும் இரண்டாவது தடவை அதில்நீராடும் போது அதே நதியல்ல” எனும் கூற்று இவ்விடத்திற்கு மிகவும் பொருந்துவது. கவிதை ஒரு திசையில் தனக்குள்ளாகவே மாறிக்கொண்டிருக்க அதற்கு முற்றிலும் எதிர்திசையில் அதை வாசிப்பவனும் மாறிக்கொண்டிருக்கிறான். முன்னது ஒட்டுமொத்தமான கால வெளியை பொருத்தது. பின்னது தனிமனிதனின் காலவெளியில் நிகழும் நிகழ்ச்சிகளின், ஆழ்மன அல்லது ஞாபகங்களின் பதிவை பொறுத்தது. எனவே ஒரு கவிதையை  வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை பெற்று வெளிவருகின்றனர். அதன்பொருட்டே கவிதை மொழியாக்கத்தில் பூரணமான ஒன்று எப்போதுமே இருப்பதில்லை.

மூலக்கவிதையிடமிருக்கும் வாக்கிய அமைப்புகள், இலக்கண கட்டமைப்பு, இசைமை, சொல்லாட்சி, வடிவம், உருவக மற்றும் படிம வெளிப்பாடுகள், சமூக கலாச்சார குறிப்புகள் etc  போன்றவற்றின் முழுமையை எட்டுவது சிரமமான காரியமே. ஆனால் அவற்றிற்கு நெருக்கமான ஒன்றை  உருவாக்கிக் கொள்ளமுடியும். மேலும், கவிஞன் வாழ்விலிருந்து மொழிக்கு பயணிக்கிறான் என்றால் மொழிபெயர்ப்பாளன் மொழியிலிருந்து வாழ்விற்கு பயணிக்கிறான். எப்படி மொழியாக்கம் செய்வது என்பதை மொழிபெயர்ப்பாளன் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. சுதந்திரமான மொழியாக்கமா அர்த்தம் கைகூடிவர கவிதையின் நுணுக்கங்கள் கைவிட்டு போய்விடுகிறது. மூலப்பிரதியை இறுக்கமாக பற்றிக்கொண்ட மொழியாக்கமா நுணுக்கங்கள் கைகூடிவர அர்த்தம் கைவிட்டு போய்விடுகிறது. ஆக இந்த இரண்டையும் சமச்சீராக கைகொள்ளவதே அந்நெருக்கமான மொழியாக்கத்தை அடைய வழியென்று நினைக்கிறேன்.

இக்கடிதத்தை இவற்றை பகிர்ந்துகொண்டு முடிக்கிறேன்,

1) கவிதையை வாசித்தல்:

ஒரு கவிதையை வாசித்தல் என்பது ஒரு
வார்த்தையின் உச்சியில் அமர்ந்தபடி நகரத்தை
நோட்டமிடுவது மற்றும் மேகமாகிக் கரைந்து
தரிசுநிலத்தை நனைப்பது மேலும் ஆற்றங்கரையில்
அமர்ந்தபடி மிதக்கும் பிணத்தைத் தரிசிப்பது
அல்லது ஒரு தேனடையை கலைப்பது தவிர ஒரு
வார்த்தைக் கொள்ளையனை ஆழ்ந்து ரசிப்பது பிறகு
நான் என் கவிதையை வாசிக்கிறேன் என்பது
ஒரு கண்ணாடியுள் இன்னொரு கண்ணாடி பிறப்பது
மேலும் உன் கவிதையை வாசிப்பது என்பது
நீரற்ற ஒரு பாழ்க்கிணற்றுள் சென்று வாழும்
ஒரு பழுத்த வேப்பிலை அல்லது கடலுக்குள்
அலைந்து கொண்டிருக்கும்
ஒரு மரக்குதிரை
-ராணிதிலக்

2) Poetry:

“Words set to music” (Dante Via Pound),
“a trip to the Unknown ” (Maiakóvski),
” cernes And marrow ” (Ezra Pound),
” the speech of the Infallible “(Goethe),
” language Focused on its own Materiality “(Jakobson),
“Permanent hesitation between sound and Sense “(Paul Valery),
” foundation of the Be by the word “(Heidegger),
“The original religion of humanity” (Novalis),
“the best words in the Best order “(Coleridge),
” emotion Reminished in Tranquility ” (Wordsworth),
“science and passion” (Alfred de Vigny),
“is made with Words, not with ideas “(Mallarmé),
“Music made with ideas” (Ricardo Reis / Fernando Pessoa),
“one Pretending really “(Fernando) ,
“Criticism of life” (Mathew Arnold),
“word-thing” (Sartre),
“Language in a state of purity Wild “(Octavio Paz),
” poetry is to Inspire “(Bob Dylan),
” design Language “(Décio Pignatari),
” the Impossible made possible “(Garcia Lorca),
“what is lost in the Translation (Robert Frost),
“freedom Of my language “(Paulo Leminski) …
-Paulo Leminski (பிரேசில்)

நன்றி

Surya Vn
suryavnwrites.blogspot.com

 

முந்தைய கட்டுரைஇலங்கை,நவீன்,அனோஜன்
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலா நன்றியுரை