«

»


Print this Post

குரு நித்யா காவிய முகாம் 2018 -உதகை – அறிவிப்பு


nithyachaithanyayathi.jpg.image.784.410

 

1993 முதல் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது குரு நித்யா காவிய முகாம். குரு நித்ய சைதன்ய யதி வாழ்ந்தகாலகட்டத்தில் அவர் தமிழ்க் கவிஞர்களைச் சந்திக்க விழைந்தமையால் நான்  நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் துணையுடன் அதை ஒருங்கமைத்தேன் . அவர் நிறைவுற்ற பின்னர் குரு நித்யா காவிய முகாம் என்றபேரில் தொடர்ந்தோம். அன்றுமுதல் நிர்மால்யா இதன் அமைப்பாளர். ஐந்தாண்டுகள் தமிழ், மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்காக இது நிகழ்ந்தது. 2010 முதல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பில் நிகழ்ந்து வருகிறது

 

வரும் மே மாதம் 4,5,6 தேதிகளில் [வெள்ளி சனி ஞாயிறு] ஊட்டியில் மீண்டும் குருநித்யா காவிய முகாமை ஒருங்கிணைக்கிறோம். பண்டை இலக்கியம், நவீன இலக்கியம் சார்ந்த அமர்வுகள் நிகழும். பங்கேற்க விழைபவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். முன்பே வருபவர்களுக்கு இடம் என்னும் நெறி கடைப்பிடிக்கப்படும். விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்கள் 30 பேர் வரை முன்னரே உறுதிசெய்துவிட்டதனால் குறைவான பேரையே ஏற்கவியலும்

நெறிகள்

 

ஊட்டி சந்திப்பிற்கான நெறிகள் சென்ற இருபத்தைந்தாண்டுகளாக பெரும்பாலும் மாறாமல் கடைப்பிடிக்கப்படுகின்றம்ன. இத்தகைகாலம் இச்சந்திப்பு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதற்கு இந்த நெறிகளே காரணம்

 

1. அனைத்து அரங்குகளிலும் கலந்துகொண்டாகவேண்டும்.வெள்ளி சனி ஞாயிறு மூன்றுநாட்களிலும் [இல்லையேல் இதை எங்கள் செலவில் ஊட்டியைச் சுற்றிப்பார்க்க பயன்படுத்திக்கொள்வார்கள் ]

 

2 நாங்கள் ஒருக்கும் தங்குமிடத்திற்கு வெளியே தங்க அனுமதி இல்லை [அரங்குகளை குறித்த பொழுதில் தொடங்க முடியாமலாகும் என்பதனால்]

 

3. அழைக்கப்படாதவர்களை அனுமதிக்க இயலாது. அனுமதியின்றி எவரையும் உடனழைத்துவரக் கூடாது [நாங்கள் எல்லைக்குட்பட்ட விருந்தினரையே அனுமதிக்கிறோம். இடச்சிக்கல். தகுதியுடையவர்களை தெரிவு செய்கிறோம். ஆகவே அயலாருக்கு இடமில்லை]

 

4. மது அருந்துவதற்கு அனுமதி இல்லை  . அரங்கிலும், வெளியிலும். [குருகுலச்சூழலின் நெறிகள் கடைப்பிடிக்கப்பட்டாகவேண்டும். இது இலவசமாக அளிக்கப்படும் இடம்]

 

5. விவாதங்கள் நெறியாள்கை செய்யப்படும். அதற்குக் கட்டுப்படவேண்டும். தனிநபர் தாக்குதல்கள், மிகையான உணர்வு வெளிப்பாடுகள் தவிர்க்கப்பட்டாகவேண்டும்

 

6. வருகை உறுதி செய்தவர்கள் முன்பணம் செலுத்தவேண்டும். வருகையை தக்க காரணமில்லாமல் தவிர்த்தால் முன்பணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது. வருவதாகச் சொல்லி பின்னர் தவிர்ப்பவர்கள் பின்னர் எந்த சந்திப்புக்கும் ஏற்கப்பட மாட்டார்கள். [இவ்வாறு தவிர்ப்பவர்களால் செலவுகள் மிகுகின்றன. தகுதியுடையவர்களுக்கு இடமில்லாமல் ஆகிறது என்பதனால்]

 

தங்குமிடம் குருகுலத்திற்குரியது. உணவுச் செலவை மட்டும் பகிர்ந்துகொள்ளவேண்டும். மாணவர்கள், நிதிச்சிக்கல் கொண்டவர்கள் முன்னரே தெரிவித்தால் செலவுப்பகிர்வில் அவர்களுக்கு விலக்கு உண்டு

 

ஆர்வமிருப்பவர்கள் தொடர்புகொள்ளலாம்

 

விண்ணப்பப் படிவம் 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeoZInXl1O26MvO4TiREcFw7kEaJce1FQU0cROhBYAwf7fz3g/viewform

========================================================================================

ஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு 

ஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு

ஊட்டி காவிய முகாம் – 2017 நினைவுகள்

ஊட்டி 2017-அ.முத்துலிங்கம்

ஊட்டி சந்திப்பு -நன்றிகள்

ஊட்டி 2017 –கவிதைபற்றி…

ஊட்டி 2017, கடிதம்

ஊட்டி சந்திப்பு நினைவுகள்

ஊட்டி ,பதிவு

ஊட்டி ஒரு பதிவு

இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..

ஊட்டி ஒரு பயணம்

ஊட்டி நண்பர்கள் வருகை

ஊட்டி முகாமனுபவம்

ஊட்டி சந்திப்பு – 2014

ஊட்டி சந்திப்பு – 2014 [2]

ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்

ஊட்டி முகாம்-எம்.ஏ.சுசீலா

ஊட்டிமுகாம்-பதிவுகள்

ஊட்டி முகாம் 2012 – பகுதி 3

ஊட்டி முகாம் 2012 – பகுதி 2

ஊட்டி – ஒரு பதிவு

ஊட்டி முகாம் 2012 – பகுதி 1

ஊட்டியிலே

கம்பராமாயணம் அரங்கம் – ஊட்டி – மே 25,26,27-2012

ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு

ஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?

ஊட்டி முகாம் -கடிதங்கள்

ஊட்டி முகாம்-கடிதம்

ஊட்டி காவிய முகாம் – வீரராகவன்

ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2

ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு

ஊட்டி காவிய முகாம் (2011) – 4

ஊட்டி காவிய முகாம் (2011) – 3

ஊட்டி காவிய முகாம் (2011) – 2

ஊட்டி காவிய முகாம் (2011) – 1

ஊட்டி காவிய முகாம் (2011)

ஊட்டி சந்திப்பு பதிவு 3

ஊட்டி சந்திப்பு அனுபவம்

ஊட்டி பதிவுகள் -1

ஊட்டி இரு கடிதங்கள்

ஊட்டி சந்திப்பு அலைகள்…

ஊட்டி சந்திப்பு குறித்து

ஊட்டி-கவிதையரங்கு

ஊட்டி கவிதையரங்கம்:பி.ராமன்

 

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/108122