விழிநீருடன் நிலவு

நாற்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு மழைநாளில், ஏதேதோ உணர்வுக்கொந்தளிப்புகளால் துயில் மறந்து கிடக்கும்போது திருவனந்தபுரம் ரேடியோவில் இந்தப்பாடல் ஒலித்தது. விரகத் துயர்நிறைந்த இப்பாடலை நான் ஒருவகையான தாலாட்டாகவே கேட்டேன்.. அதன்பின் எப்போதும் என் உள்ளங்கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆனால் அரிதாகவே இதைக் கேட்பேன்.

நீலாம்பரி ராகம் தாலாட்டுக்குரியது என்று பின்னர் அறிந்தேன்.  இப்பாடலின் வரிகளாலும் இது அணுக்கமாக உள்ளது. என் இளமையின் பகுதியாகத் திகழும் ஜெயச்சந்திரனின் குரலும்

jaya

ஹர்ஷபாஷ்பம் தூகி  பஞ்சமி வந்நு

இந்துமுகீ ! இந்துமுகீ ! எந்து செய்வூ நீ?

ஏது ஸ்வப்ன புஷ்பவனம் நீ திரயுந்நூ?

ஏது ராக கல்பனையில் நீ முழுகுந்நூ?

விண்ணிலே சுதாகரனோ விரஹியாய காமுகனோ

இந்நு நின்றே சிந்தகளே ஆரு உணர்த்துந்நூ?

சகி ஆருணர்த்துந்நூ?

சிராவண நிஸீதினி தன் பூவனம் தளிர்த்து

பாதிராவின் தாழ்வரையிலே பவிழமல்லிகள் பூத்து

விஃபலமாய மதுவிதுவால் விரஹசோக ஸ்மரணகளால்

அகலே என் கினாக்களுமாய் ஞானிரிக்குந்ந்து

சகீ ஞானிரிக்குந்நூ

[ஆனந்தக் கண்ணீர் பொழிந்தபடி

மழைக்கால ஐந்தாம்நிலவு வந்திருக்கிறது

நிலவுமுகமுள்ளவளே நிலவுமுகமுள்ளவளே

என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ?

எந்தக்கனவின் பூந்தோட்டத்தைத் தேடுகிறாய்?

எந்த காதல் கற்பனையில் மூழ்குகிறாய்?

விண்ணிலே நிலவா பிரிவுத்துயர்கொண்ட காதலனா

இன்று உன் சிந்தனைகளை எழுப்புவது யார்?

தோழி எழுப்புவது யார்?

சிரவண மாத இரவின் பூங்காடு தளிர்விட்டது

நள்ளிரவின் சமவெளியில் பவிழமல்லிகைகள் பூத்தன

நிறைவேறாத தேனிலவின் பிரிவுத்துயர் நிறைந்த நினைவுகளுடன்

தொலைவில் என் கனவுகளுடன் நான் இருக்கின்றேன்

தோழி நான் இருக்கின்றேன்…