ஐயா வணக்கம்,
தமிழில் எழுத முயற்சிக்கிறேன் பிழையிருந்தால் மன்னிக்கவும்.
நான் ஒரு ஆரம்ப கால வாசகன். உங்கள் அறம் நாவல் மற்றும் பனிமணிதனை தொடர்ந்து ஏலாம் உலகம் வாசித்து முடித்தேன்.
என்னுடைய புரிதல்:
ஒரு கசப்பான அனுபவம். நமக்குள் எத்தனை வக்கிரங்கள். நாம் செய்வது தவறு என்ற பிரக்னையெ இல்லாமல் எல்லாம் நடக்கிறது. எனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது முத்தம்மை கடைசியில் கூணனுடன் இனைந்தது அது அவளின் முதல் பிள்ளை என்று முந்தைய அத்தியாயத்தில் எனக்கு தோணியது. அந்த ஒற்றை விரல் மேலும் உறுதி செய்தது. முத்தம்மைக்கு தெரிய வருகிறது பெருமாளை அழைக்கிறாள் ஆனால் எதுவும் சொல்லவில்லை பதறுகிறாள் கதறுகிறாள் கதை முடிகிறது. எனக்கு எழந்த எண்ணம் ஏன் அவள் முயற்சி செய்து தடுக்கவுல்லை. அந்த நிகழ்வை என்னவென்று புறிந்து கொள்வது? என்னுடைய வாசிப்பு முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். கேள்வியில் தவறிருந்தால் மன்னிக்கவும்…
-விஷ்ணு.
அன்புள்ள ஜெ
ஏழாம் உலகம் நாவலை இப்போதுதான் வாசித்தேன். வாசித்து முடித்ததும் எழுதுகிறேன். ஒருவகையான நிலைகொள்ளா மனநிலையே இருக்கிறது. பல இடங்களைச் சுட்டிக்காட்டமுடியும். பெரிய பெரிய நிகழ்ச்சிகள் எல்லாம் உள்ளன. ஆனால் ராமப்பன் தன்னுடைய தடியால் தட்டி காமத்தை அனுபவிப்பது, கைவிரல்கள் கண்டு எழுச்சி பெறுவது ஆகிய இரண்டும் உலுக்கிவிட்டன. பரிதாபத்தினால் அல்ல. மனிதன் எந்த நிலையிலும் காமத்தையும் அழகுணர்ச்சியையும் நீதியுணர்ச்சியையும் வைத்துக்கொள்கிறான் என்பதனால். எப்போதும் ஒரு மாங்காண்டிச்சாமி கூட இருக்கிறார் என்பதனால். நாவலில் உள்ள மற்றதெல்லாம் பலராலும் எழுதப்பட்டுவிட்டது. இந்தக் காமம் மட்டும்தான் எழுதப்படவில்லை
பிரபா
***
ஏழாம் உலகம் வாங்க
ஏழாம் உலகம் மின்னூல் வாங்க
ஏழாம் உலகம் விமர்சனங்கள் தளம்