மன்னார்குடி

vennaiththaazhi

இன்று மாலை நானும் அருண்மொழியும் கிளம்பி காலை தஞ்சை சென்று  அங்கிருந்து மன்னார்குடி  செல்கிறோம். நாளையும் மறுநாளும் அங்கிருப்போம். நண்பர் டோக்கியோ செந்தில் ஊருக்கு வந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தின் வெண்ணைத்தாழி விழாவுக்கு வருவது அவர் வழக்கம். நண்பர்கள் அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் என்னை அழைப்பார். இம்முறை சென்று வரலாம் என நினைத்தேன். வெண்ணைத்தாழி விழா, மறுநாள் தேர்விழா கண்டு திரும்புகிறோம். ஈரோடு, சென்னை, திருச்சி நண்பர்கள் வருகிறார்கள். ஒரு விழாமனநிலை உடனடியாகத் தேவைப்படுகிறது.

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு- இமைக்கணம்
அடுத்த கட்டுரைபயணம் கடிதங்கள்