நம்பியின் சொல்

27655195_165750504208200_7191815790252039913_n

அலை

அலைமேல் அலை
அலைகிறது அலை

கட்டுமரங்கள் மேல்
மீனவர்கள்

கடல்
இசைக்கும் ராகம்

சூரியோதயம்
சந்திரோதயம்

தாய்தயவில்
தெற்குக் கடைசியில்.

இவன் கனவில்

அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்

 

சாயைகள்

வெற்றி
பெற்றவனும் புலம்புகின்றான் தனிமையில்

ஏன்
சும்மாவா வரும் வெற்றி

சுமந்தாலும்
வருமா வெற்றி

ஒரு
பெரும் நித்திரை

இரவில்
வரும் கனவு

சூடிச்சூடி
சூடச்சூட

வெட்டவெளி
பொட்டல் நிஜமில்லையோ

விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுற்றமும் தண்டனையும் பற்றி…