கேரளக் காலனி

DW0My6uVQAEBRy0

கேரளத்தின் காலனி

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களின் ‘கேரளத்தின் காலனி கட்டுரை படித்தேன். மலையாளிகள் என்றாலே காடுகளை போற்றுவர்கள், நன்கு பேணுபவர்கள், அதனாலேதான் கேரளா முழுவதும் மரங்கள் அடர்ந்து எங்கும் பசுமையாகவே காட்சியளிக்கிறது என்ற தவறான மனச்சித்திரத்தை இதுவரை கொண்டிருந்தேன். மேலும் அவர்களில் பெரும்பாலோர்கள் அறிவுஜீவிகள், அடிப்படை மனித நாகரீகமுடையவர்கள், எளியவர்களின் நலத்தில் மிகுந்த அக்கறை கொள்பவர்கள் என்றும் நினைத்திருந்தேன்!. இந்த நீண்ட கட்டுரை அதை பொய்யாக்கி என் மனதை வெறுமை அடையச்செய்துவிட்டது.

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள ஜெ

கேரளத்தின் காலனி என்ற கட்டுரை வாசித்தேன். பொத்தாம்பொதுவான கட்டுரைகளுக்கு நடுவே மிகக்குறிப்பாக அந்த சமூக, அரசியல், பண்பாட்டுச்சூழலைச் சுட்டிக்காட்டிய கட்டுரை. தெளிவாகவே என்ன நிகழ்கிறது என்பதைக் காட்டியது. ஆனால் அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது என்றும் எனக்குப்பட்டது. ஏனென்றால் கேரளம் ஒரு நவீன சமூகம். மாடர்னிசம் என்று சொல்லலாம். மார்க்ஸிஸமும் மாடர்னிசத்தின் ஒரு பகுதிதானே. மாடர்னிச சமூகம் அக்ரெஸிவ் ஆனது. அது இயற்கை வளங்களை சூறையாடி, தன்னை கோபுரம் போல மேலே தூக்கிக்கொண்டு வளரும். மாடர்னிசத்தின் ஐக்கான் எழும்பிய குறிதான் என்று லகான் சொல்கிறார்.

அந்தமாதிரி சமூகத்தில் பழங்குடிகள்போல தேக்கநிலை சமூகங்கள் ஒதுக்கப்படாது. அழிக்கப்படும். உறிஞ்சி மென்று துப்பப்படும். வேறு வழியே இல்லை. அக்ரெஸிவான மரம் வேர்களால் எல்லாவற்றையும் கவ்வி சாப்பிடுவதுபோல அது. ஆகவே கேரளபாணி வறுமை ஒழிப்பு சமத்துவம் வசதிவாய்ப்பு டெக்னாலஜி எல்லாம் வேண்டுமென்றால் இந்த அழிவும் வேண்டும். இதைத்தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் போட்டி வழியாகத்தான் மாடர்னிச சொசைட்டியில் எல்லாமே தீர்மானமாகிறது. கடுமையான போட்டி. அதுதான் மாடர்னிசத்தின் விதி. அங்கே எல்லாருமே போட்டியிடவேண்டும் பழங்குடிகல் மட்டும் போட்டியிடமாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?

போட்டியில் இல்லாதவர்கள் போட்டியில் இருக்கும் சக்திகளால் உறிஞ்சி அழிக்கப்படுவார்கள். அப்படி நடக்காமலிருக்கமுடியாது. இல்லாவிட்டால் பழங்குடியினரை மியூசியம்பீஸ் ஆக வைக்கவேண்டும். இதெல்லாம்தான் அமெரிக்காவில் நடக்கிறது. வெறுமே இதற்குள் இருந்துகொண்டு மனிதாபிமானம் பேசுவது பசப்புதான்.

சக்திவேல்

முந்தைய கட்டுரைஅஷ்டவக்ரகீதை
அடுத்த கட்டுரைசெதுக்குகலையும் வெறியாட்டும்