அன்பு ஜெமோ,
நலம்தானே?
வரும் 31 மார்ச் அன்று அஷ்டாவக்ர கீதையின் இசைவடிவ வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். அஷ்டாவக்ர கீதாவின் முதல் ‘தன்னறிதல்’அத்தியாயத்துக்கு எனக்குத்தெரிந்து இசை வடிவம் ஏதும் இல்லை. இது முதல் முயற்சி என்று நினைக்கிறேன். அகாபெல்லா இசையில் உலகப்புகழ் பெற்ற லிக்விட் 5th ஸ்டூடியோ இசைக்கலப்பு செய்துள்ளனர். யூடியூபில் வீடியோவுடன் வெளியிட்டிருக்கிறோம்.
மாரிஸ்வில்லில் உள்ள 519 சர்ச் ஆடிட்டோரியத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தத்துவத்தில் உயராய்வு செய்யும் தம்பதியர் பேரா. ழாக் பசான், பேரா.பமிலா வின்பீல்டு இதை வெளியிட்டு அத்வைதம் பற்றி பேச உள்ளார்கள். அவர்களுடனான ஒரு உரையாடல் மூலமாகவே அஷ்டவக்ர கீதையைப்பற்றி அறிந்தேன். ஆனால், அதைப்புரிந்து கொள்ள, தங்களின் ஆதிசங்கரர் மீதான செறிவான உரை பேருதவியாக இருந்தது.
ராலே பகுதியில் உள்ள நான்கு மரபிசைப் பள்ளிகளின் ஆசிரியர்கள், அவர்களின் சில மாணவர்கள் என 12 பாடகர்களும், 12 இசைக்கலைஞர்களும் இந்த இசைவடிவை நேரில் பாடி வழங்க உள்ளனர். தமிழ், குஜராத்தி, மராத்தி, பெங்காலி என பல மொழியைச்சேர்ந்த அமைப்புகளும் கலந்துகொள்கின்றன. நாள், நேரம், இடம் விவரங்கள் கீழே. ராலே பகுதி நண்பர்களை வரவேற்கிறோம்! அனுமதி இலவசம்.
Date: 31 March 2018
Time: 3:30PM-5:15PM
Venue: 519 Church Conference Center, 1100 Perimeter Park Dr #118, Morrisville, NC 27560
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்