நீர்க்கோலம் -முன்பதிவு

NEERKOLAM

ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது.

 

அத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவரும் பிறிதொருவராகிறார்கள். ஊழால் உருமாற்றம் அடைகிறார்கள். ஆழ்மனத்தில், கனவில் உருமாற்றம் அடைகிறார்கள். ஒளிந்துகொள்ள மாற்றுருக் கொள்கிறார்கள். நிகழ்ந்தவை கதையெனச் சொல்லப்படும்போது மாற்றமடைகின்றன. உருமாற்றம் என்பதனூடாக உருவமென உடலைச் சூடி நின்றிருக்கும் ஒன்றைப்பற்றிய ஆய்வென இந்நாவல் விரிகிறது.

 

நீர்க்கோலம் – வெண்முரசு நாவல் வரிசையில் பதிநான்காவது நாவல்.

 

1032 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 21 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன

 

முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:

 

முன்பதிவு செய்ய கடைசி நாள்மார்ச் 7, 2018.

 

 

* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.

 

* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.

 

* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பில் தெரிவிக்கவும்.

 

* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.

 

* மார்ச் 20ம் தேதிக்கு பிறகு புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.

 

* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.

 

* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.

 

* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.

 

* Paytm மூலம் வாங்க 95000 45609.

 

* Paypal மூலம் பணம் அனுப்ப விரும்புவர்கள் [email protected] என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை [email protected] என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.

 

* UPI மூலம் பணம் செலுத்த: dfb@hdfcbank என்ற ஐடிக்குப் பணம் அனுப்பிவிட்டு, எங்களுக்கு இமெயில் மூலம் விவரங்களை அனுப்பலாம்.

 

* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.

 

* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் [email protected] என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.

 

 

பதிவுசெய்ய 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69
அடுத்த கட்டுரைஇலக்கிய டயட் -பரிந்துரை