ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்

ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா கோவையில் வரும் 19 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. அதைப்பற்றி என் பெருமதிப்புக்குரிய அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய குறிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது

ஆ.மாதவனின் படைப்புகளில் நான் முதலில் படித்தது ‘கிருஷ்ணப் பருந்து’ நாவலைத்தான். அது இருபது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். நான் அப்பொழுது பாகிஸ்தானின் பெஷவார் நகரத்தில் வேலையாக இருந்தே. இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் நான் கேட்டதன் பேரில் இந்த நாவலை வாங்கி எனக்காக அனுப்பியிருந்தார். அது நீண்டநாட்களுக்கு பிறகு நனைந்து மெலிந்து உருமாறி என்னிடம் வந்திருந்தது. இந்தியாவில் இருந்து வரும் பார்சல்கள் சோதிக்கப்படுவதால் அது திறந்து மறுபடியும் ஒட்டப்பட்டு வந்த விசயம் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது

அ.முத்துலிங்கம் கட்டுரை

முந்தைய கட்டுரைகல்யாணப்பாறை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது இந்து செய்தி