ஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்

sel

நெல்லை புத்தகக் கண்காட்சியில் செல்வேந்திரன் ஆற்றிய உரையைப்பற்றி முதலில் சொன்னவர் எனக்கும் செல்வேந்திரனுக்கும் நட்புண்டு என்று தெரியாத ஒரு நண்பர் “செல்வேந்திரன்னு ஒரு சின்ன பய சார், என்னா பேச்சு” என்றார். சின்னப்பையன் என்று அவர் சொன்னது சற்றே மிகைதான். ஆனால் பேச்சு அவரைக் கவர்ந்திருப்பது தெரிந்தது

அதன்பின்னர் அப்பேச்சின் எழுத்துவடிவை வாசித்தேன். ஒர் அபாரமான உரை. அந்தரங்கத்தன்மையும் உணர்ச்சிகரமும் கூடவே செய்திகளும். அதேசமயம் அலைபாயாமல் நேர்த்தியான வடிவையும் கொண்டிருக்கிறது. மேடையுரை என்றாலே சம்பந்தமில்லாமல் சென்றுகொண்டே இருக்கும் ஒரு சொற்சுழல் என்பதுதான் இன்றைய வழக்கம். இத்தகைய உரைகள்தான் நல்ல மேடையுரை இன்னமும்கூட தமிழில் சாத்தியம் என்பதைக் காட்டுகின்றன

ஜெயமோகன்

***

1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி சகாரா கோப்பை முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இளம் வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் நுழைந்த தேபஷிஸ் மொஹந்தி எனும் ஒரிஸாக்காரருக்கு அது ஒரு மகத்தான நாளாக அமைந்தது. அதிவேக லெக் கட்டர் வீசி பாகிஸ்தானின் சிறந்த ஆட்டக்காரரான சயீத் அன்வரை அவர் க்ளீன் போல்டாக்கினார். மொஹந்தி பந்து வீசும் ஸ்டைலும் திறமையும் கிரிக்கெட் வர்ணனையாளர்களால் பெரிதும் புகழப்பட்டது.அன்றிரவு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றிருப்பார். ஆனால், அந்த முழு ஆட்டத்தினையும் விடிய விடிய விழித்திருந்து பார்த்த 15 வயது சிறுவனான எனக்கு அந்த ராத்திரியை இன்று இந்த மேடையில் நினைத்தாலும் உள்ளம் நடுங்குகிறது.

நெல்லை புத்தகக் கண்காட்சியில் செல்வேந்திரன் ஆற்றிய உரை

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் வாசிப்பது பற்றி…
அடுத்த கட்டுரைவீடுதிரும்புதல்