திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். 2018 உற்சாகமான தொடக்கம். பழனி பாதயாத்திரை, முதல் அறுவடை மற்றும் பணியிலும் மாற்றம் இப்படியே பயணிக்கிறது.
நெல் மார்கழிக்கு பின் தண்ணீர் கட்ட வழியின்றி வறண்டு போனது. மாட்டிற்கு அறுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறோம். உளுந்து விளையவில்லை, அவ்வப்போது தண்டபானி அண்ணணிடம் படங்கள் அனுப்பி அறிவுரைகள் பெற்று வந்தோம் ஒரு முறை இதற்கு மேல் பலனில்லை மடக்கி உழுதுவிடுங்கள் பின் கூலிக்குக்கூட ஆகாது என்றார். சரி என்று ஏற்பாடுகள் செய்தோம் எப்பொழுதும் வேலைக்கு வந்தவர் முடிவு பன்னிடிங்க இருக்குறத எடுத்துக்கிட்டு அப்புறம் பிரட்டினா என்ன என்றார். அவர் இருந்து எடுத்த உளுந்து 30 கிலோ வரை இருந்தது. இன்று வரை அதை எப்படி உளுத்தம் பருப்பாக்குவது என்று புரியாமல் வேடிக்கை பார்க்கிறோம் ;) காரணம் அது நல்லபடியாக விளைந்துள்ளதா உணவுக்கு உகந்ததா என்று புரியவில்லை வெளியிலிருந்து கிடைத்த அறிவுரை போல் அதை காயவைத்து உடைக்கமுடியவில்லை, உடைத்தால் நொறுங்குகிறது தவிர ஓடு உடைத்தால் உள்ளே பருப்பு இருப்பதாக தெரிவில்லை.
இதற்கு முன்பாக உளுந்து வீட்டிற்கு வந்ததுமே வீடு கலை கட்டியிருந்தது, தந்தை அழைத்து 30கி தேரும் போல பிள்ளையாருக்கு வடைக்கு 2 கி போட சொல்லியிருக்கேன் கோயிலில் விநியோகம் பன்னிடுவோம் என்றார். பின் இரண்டு நாளில் அம்மா அழைத்து ஏன் தம்பி இத எப்படி வடைக்கு ஆட்டுவது, உடைத்தாலும் வரல தண்ணீரல ஊரப்போட்டாலும் சரியா வரலையே என்று குறைப்பட்டுக்கொண்டார். ஹம் என்று திரும்பிய போது பிள்ளையார் இந்த பக்கம் ‘எப்ப சாப்பிடலாம் என்ற தோனியில் பார்த்தார்’. அடுத்ததாகவும் கடைசியாகவும் இந்த பட்டத்திற்கான நம்பிக்கையை தளரவிடாமல் பார்த்துக்கொண்டது கொள்ளு.
தண்டபானி அண்ணண் அவர்களை கோவையில் விஷ்ணுபுரம் விழாவில் நேரில் சந்தித்தது ஒரு பெரிய தருனம். பரஸ்பரம் அறிமுகம் செய்துக்கொண்டோம். குரல் அடையாளம் களைந்து முக அடையாளம் பெற்றோம். பின் பொங்கல் சமயத்தில் பயிறுகளை படங்களில் பார்த்துவிட்டு மார்கழி முடிந்ததும் தொடரும் பனி பொழிவே பொதும் தை கடைசி வாரத்தில் அறுவடைக்கு வந்துவிடும் என்று சொல்லி அத்தொடு மேலும் சில கேள்விகள் கேட்டார், செடிகளில் எத்தனை கிளை, கிளைக்கு எத்தனை காய், காய்க்கு எத்தனை முத்து இருக்கிறது என்று அதன் அடிப்படையில் அளவிட்டார் 150 கி வரை வரலாம் என்றார் தண்டபானி அண்ணண். இந்த உரையாடலின் போது தான் ‘நீ கி.ராவோட கரிசல்காட்டில் ஒரு சம்சாரி படிச்சிறிக்கியா? கோவையில் உனக்கு அந்த புத்தகத்தை கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதை முடிந்தால் படி என்றார்’. புத்தக கண்காட்சியில் முதல் வேலையே அதுதான் கிரா அவர்களின் குறுநாவல் நூலில் இருந்தது எடுத்துக்கொண்டேன்.
கிரா… இப்படி சொல்லிப்பார்க்கிறேன் கிராமங்கள் சிற்றூர்களில் இருக்கும் ஐய்யனார் கோவில் ஒரு நெருக்கம் உணருவோம் பெரிய ஈர்ப்பு கொண்டது காலம் செல்வதே தெரியாமல் அங்கே இருக்கலாம் அந்த அனுபவம் தான் கிரா. இதற்கு முன்னால் அருகே இருக்கும் நூலகத்திலிருந்து பிள்ளைகளுக்கு இரவு கதை படிப்பதற்காக ‘தாத்தா சொன்ன கதைகள்’ படித்துதான் முதல் முறை அடுத்தது ‘கரிசல்காட்டில் ஒரு சம்சாரி’ அந்த ஈர்ப்பு அடுத்த கதையான ‘கிடை’ படித்தேன் ஆறு போல நாம் செல்வதே தெரியாமல் கொண்டு செல்கிறது அந்த நடை ஆங்காங்கே நம்மையும் அறியால் சிரித்துவிடுகிறோம் தான்.
சென்ற வாரம் கொள்ளும் அறுவடையானது. துள்ளியாமான அளவிடல் ஆம் மொத்தம் 150கி. 20 கி எடுத்து வைத்துக்கொண்டோம் ஊரில் விநியோகம் மற்றும் அடுத்த விதைப்பிற்கு. முதலில் வீட்டில் வைத்து முன்னோர்கள் ஆசிர்வாதம் பின் முதல் விநியோகம் நம்ம பிள்ளையாருக்கு தான் 2 கி கொள்ளு அவித்து கொடுக்க கொடுத்து அனுப்பினோம். ஒற்றை தேங்காயொடு தொடங்கி சோதனைகள், சோதனையின் முடிவு கொள்ளு தானா இல்லை மேலும் சோதனைகள் தொடருமா என்று பிள்ளையாரிடம் அடுத்த கோரிக்கை வைக்கலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அண்ணணிடம் பேசி அறுவடைக்கு பின் செய்யவேண்டிய காரியங்களை தெரிந்து செய்தோம். முதல் வாரத்திலேயே வேலைக்கு வந்த கிராமத்தினர் 5கி என்று வாங்கி சென்றனர். தந்தை மிக உற்சாகமாகயிருந்தார் அவருக்கேயான பக்குவத்துடன், நான் சற்று ஆர்வத்துடன் டமாரம் அடித்தேன் என் நட்பு வட்டங்களில். என்ன தான் ஒரு புறம் பக்குவமுடன் இரு என்று கட்டளையிட்டாலும் ஒரு சிறு பிள்ளை தனம் டமாரம் அடிக்க சொல்லியது. இந்த வாரங்களில் அடக்கி வாசிக்கிறேன் சென்னை கொண்டு வந்த பின் விற்பனையில் செயல் பட வேண்டும். வாங்குவோர் அனுகலாம் என்று பதிவிட அனுமதி உண்டென்றால் ‘தொடர்புக்கு [email protected]‘ ;) சந்தை அறிதல் அனுபவம் பெற்றபின் எழுத வேண்டும் புதிய வேளான் ஆர்வளர்களுக்கு சந்தையும் தெரியவேண்டும் ஆகையால் அதுவம் பாலபாடமாக இருந்தால் நல்லது.
எங்கள் ஊரில் மழை அளவு பற்றிய தகவல் சேர்க்க வேண்டிய அவசியம் பேசினோம். அரசு இணையத்தில் ஓர் அளவு கிடைக்கிறது கடந்த மாதத்தில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 84 விழுக்காடு வீழ்ச்சி. அதே போல் சென்ற ஆண்டைவிட நிலத்தடி நீர் மட்டம் 8 அடி கீழே போயிருக்கிறது. அரசாங்க மழை தரவுகளில் சிவகங்கை மாவட்டம் அதிலும் எங்கள் கிராம வட்டம் முழு சிவப்பில். நமக்கு வேண்டியது போல போன பட்டத்தில், ஆண்டில், 3 மாதத்தில் என்று தெரிந்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். ஆக மொத்தம் வருன பகவானின் பார்வைக்கு படதா பூமி தான் என்று தெளிவாகிறது. இதற்கு தகுந்தாற் போல பியிறுகள் தெர்ந்தெடுக்க வேண்டும். தந்தை அடுத்து எள்ளு, உளுந்து, தண்ணீர் பூசணி, பரங்கி என்று விசாரிக்க தொடங்கிவிட்டார்.
சில ஒவ்வாமைகளும் உண்டு தான், வீட்டொடு மற்ற அனைவருக்கும் அந்த பஞ்சகவ்யம் ;) ஒன்று இரண்டும் முறை பயண்பாட்டிற்கு பின் கவனிப்பாரற்று புளு வந்துவிட்டது மிண்டும் பயண்படுமா என்பது சந்தேகமே. இதற்கு தான் அதிக வேலை எடுத்தது காரணம் நாட்டு மாடு, இரண்டாவது நாட்டு மாடு கிடைத்தாலும் அளவுகள் மிக குறைவு அதன் பிறகு தயிர், நெய் தயாரிப்புகள். அதற்காகவே தனி மடல் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டும் என்னும் தொடங்காமல் வைத்துக்கொண்டுள்ளேன்.
அனைத்திற்கு இடையில் மின்சார வாரிய பணிகள், அவர்களே செயல்படுவது அறிது என்றாலும் அதற்கும் ஏதாவது தடை வந்துவிடுகிறது. எங்களுக்கு மின் இணைப்பு தரவேண்டிய கம்பம் அருகாமை தோட்டத்தில் உள்ளது தோட்டத்துக்கார்ர் கம்பங்கள் வேலைகளுக்கு இடையூராக இருப்பதாகவும் அவைகளை வெளியே எடுக்கவேண்டும் என்று எழுதிக்கொடுத்தவிட்டதாகவும் அகவே இணைப்பு இதிலிருந்து தரக்கூடாது என்று கட்டைபோட்டவிட்டார் ;) பரஸ்பரம் பேச்சு போய் கொண்டிருக்கிறது ஆனால் நகரும் வேகம் ஒன்று நம்பிக்கை அளிப்பதாகயில்லை. சரி என்று வீடு கட்டி அதற்கு அவர்கள் மின் இணைப்பு தரத்தானே வேண்டும் என்று கேட்டால் வந்து இது வீடு மாதிரி இல்லை (!;)) சொல்லிவிட்டு உடனே வேண்டும் என்றால் அருகாமை தோட்டத்திலிருந்துதான் முடியும் கேட்டு சொல்லுகங்ள் என்று கை விரித்துவிட்டனர். இதற்கு மின் வாரிய தீர்வு என்ன என்று பேசவே அவர்கள் நேரம் தரவில்லை. இப்போது இது தான் அடுத்த வேலை, எங்கள் முதல் முயற்சி மரங்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உயிரை பிடித்துக்கொண்டிருக்கிறது தண்ணீர் இல்லாமல் இனி அவர்களை காப்பாற்ற வேண்டும் இது தான் இப்போதைய முழு முயற்சியும்.
இந்த தருனத்தில், எங்கள் முயற்சிகளின் முதல் பலன் அதற்காக, எங்களுக்கு பல வழிகளில் அறிவு சார், மன வலிமை கொடுத்த, தொடர்ந்து ஊக்கப்படுத்திய அனைவரும் நன்றிகளை பதிவு செய்யவேண்டியது கடமை. கூறிப்பாக, ஆர் எஸ் நாராயணன், தாங்கள் மற்றும் தண்டபானி அண்ணண் அவர்களுக்கு பணிவான நன்றிகள் _/\_
பாரதியின் ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்’ என்ற வரிகளை நினைத்துக்கொள்கிறேன்.
பணி மாற்றங்கள் காரணமாக தவறவிடக்கூடாது என்ற ஆர்வத்தால் ஊட்டி இலக்கிய முகாம் இந்த முறையும் வார இறுதியில் இருக்கவேண்டும் என்ற ஆவலோடு முடிவு செய்கிறேன்.
பாலபாடம் சிறு குறிப்புகளா ஒழுங்குபடுத்தலாம் என்று தொன்றுகிறது;
– வேளான் நிலம் கண்ணில் பட வேண்டும், தினம் தினம் பார்வையிடும்படி. நாம் அங்கு இருக்கவேண்டும் அல்ல ஒரு வேளான் குடி இருக்க வேண்டும், குறைந்தது காவல் குடி. இல்லையேன்றால் எத்தனை காலம் வேண்டுமானாலும் பொறுமையாக இருங்கள் தயாரானதும் செயல்படுங்கள்.
– புதிதாக வேளான் நிலம்/தோட்டம் வாங்குவதாயிருந்தால் பல விசயங்கிளில், முக்கியமாக – மின்சார வசதி இருந்தால் சால சிறப்பு!
– புதிய விவசாய மானிய மின் இணைப்பு என்றால்(எந்த சலுகைகலும் இல்லாத வகையில்) – இணைப்பு கேட்ட பின், அதன் அடிப்படையில் விவசாய விலை (ரூ.4) இணைப்பு கோர வேண்டும் உடனடி இணைப்பிற்கு. அதன் வேகத்தில் தான் நடக்கும் முக்கியமாக அருகில் 100 அடியில் மின் கம்பம் இருந்தால் தான் அதுவும் நடக்கும்.
– எந்த ஒரு வேலையும் கேட்பது போல படிப்பது போல அது ஒன்றாக மட்டும் இருப்பதில்லை, அதனினுள் பல படிகளாக வேலைகள் இருக்கும், நெருங்கையில் தான் தெரியும், ஆக தயாராகயிருக்கவேண்டும்.
– சிறு விவசாயி – அங்கே சில ‘க்’குள் பாசனவசதியற்ற புஞ்சை (பாசன வசதியிருந்தால் 2.5 ஏக்கர்), தனி நபருக்கு 5 ஏக்கர் குறைவாக இருத்தல் வேண்டும், குடும்பத்தில் வெறு யாருக்கும் நிலம் இருக்ககூடாது.
நன்றி!
நாராயணன் மெய்யப்பன்