அகாலக்காலம் -கடிதங்கள்

sey

 

அகாலக்காலம்

அன்புள்ள ஜெ

 

நீங்கள் சென்ற தடம் இதழில் எழுதியஅகாலக்காலம் கட்டுரையை வாசித்துக்கொண்டு இருந்தபோது தினமணி கைக்குச் சிக்கியது. அதன் செய்தி ஒன்றை வாசித்து குபீரென்று சிரித்துவிட்டேன். நீங்கள் அக்கட்டுரையில் சொல்லும் நடப்பு முப்பதாண்டுகளுக்கு முன்பு. இது இன்றைய யதார்த்தம். இன்னும் நூறு வருசம் கழித்து 2118ல் கூட ’இதேபோல இலக்கியம் அன்றாட வாழ்க்கையை எழுதவேண்டும்’ என்று யாரோ ஒருவர் ஏதோ ஒருவிழாவிலே பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என நினைக்கிறேன்

 

மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

 

நத்தையின் பாதை தொடரின் கட்டுரைகள் சுருக்கமாகவும் அனுபவக்குறிப்பு – இலக்கியவிவாதம் என்னும் அமைப்பிலும் அமைந்துள்ளன. ஓர் இலக்கியக்கருத்து எப்படி ஒர் இலக்கியச்சூழலிலே உருவாகிப் பேசப்படுகிறது, எப்படி அது எதிர்கொள்ளப்படுகிறது என்பதை அந்தக்கட்டுரைகளில் பார்க்கமுடிகிறது. அது ஆச்சரியமாக உள்ளது. மிக ஆழமான விவாதங்கள் நடந்த ஒரு காலம் போலத்தெரிகிறது. அல்லது ஆழமான விவாதங்களை மட்டும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். நிகழ்ச்சிகள் எல்லாம் பெரிதாக ஏதுமில்லை. ஆனால் சாதாரணமான ஓர் உரையாடலில் ஒரு முக்கியமான கருத்து எப்படி உருவாகி வருகிறது என்பதைக் காணமுடிகிறது. அதிலும்  ‘அன்றாடத்தை ஏற்றி இறக்கும் போர்ட்டர்கள்’ என்ற சுந்தர ராமசாமியின் வரி மிக முக்கியமானது

 

ஆனந்த்

 

அகாலக்காலம் கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66
அடுத்த கட்டுரைகைதி-நாடகநிகழ்வு