புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு 

vish

நண்பர்களே,

வருகிற பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இவ்வருடத்திற்கான  புதிய வாசகர் சந்திப்பை ஈரோட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம், இது வழக்கம் போல ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே உள்ள   வழக்கறிஞர் செந்திலின் பண்ணை இல்லத்தில் சனி காலை 10 முதல் ஞாயிறு மதியம் வரை நடைபெறும்.   ஜெ வை ஓரிரு முறை சந்தித்தவர்கள் புதியவர்கள் ஆகியோர் அவரை சந்திக்கலாம்.

இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர் , வயது , தற்போதைய  முகவரி, தொழில், கை பேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு  ஒரு மின்னஞ்சல் செய்யவும். விபரமறிய தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

கிருஷ்ணன்

98659 16970

[email protected]

சந்திர சேகரன்

98430 26000

கிருஷ்ணன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

பிகு

அ.இதுவரை சந்திப்புகளில் கலந்துகொள்ளாத புதியவாசகர்களுக்கான சந்திப்பு இது. இடமிருந்தால் ஏற்கனவே கலந்துகொண்டவர்களையும் பரிசீலிப்போம்.

ஆ.புதிய வாசகர்கள் தங்கள் படைப்புகளை விவாதிக்க விரும்பினால் அவற்றின் நகல்களுடன் வரலாம்.

முந்தைய கட்டுரைரதிசுகஸாரே…
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60