அருட்செல்வப் பேரரசன் சந்திப்பு

IMG-20180209-WA0004

 

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் வாரந்தோறும் நிகழ்ந்துவரும் பொன்மாலைப்பொழுது என்னும் நிகழ்ச்சியில் வரும் 10 [சனிக்கிழமை] மாலை 630  க்கு ஏற்பாடுசெய்யபட்டுள்ள நிகழ்ச்சியில் அருட்செல்வப்பேரரசன் வாசகர்களைச் சந்திக்கிறார். கிசாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மகாபாரதத்தை அருட்செல்வபேரரசன்  கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தன் இணையதளத்தில் தமிழாக்கம் செய்து வெளியிட்டுவருகிறார்

அரசனின் இணையதளம் -முழுமகாபாரதம்

மகாபாரதத்தின்  கங்கூலி மொழியாக்கம் மிகப்புகழ்பெற்றது. மகாபாரதத்தை கிசாரிமோகன் கங்கூலி 1883 and 1896  வாக்கில் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தார். இன்றுவரை இந்தியாவில் நிகழ்ந்த இலக்கியச் சாதனைகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

 

இருவகையில் அந்த மொழியாக்கம் முக்கியமானது. இந்தியா முழுக்க மகாபாரதம் வெவ்வேறு வடிவங்களில் சிதறிக்கிடந்தது. பலவகை பதிப்புகள், பாடபேதங்கள். கங்கூலியின் மொழியாக்கத்திற்குப்பின் அதனடிப்படையில் இந்தியாவெங்கும் மகாபாரதம் தரப்படுத்தப்பட்டு பொதுவடிவம் உருவானது. அன்றைய ஆங்கிலமறிந்த இளையதலைமுறைக்கு இந்தியாவின் பிரம்மாண்டமான மரபுச்செல்வத்தை அந்நூல் கொண்டுசென்று சேர்த்தது. உலக அளவிலும் கவனம் பெற்றது

aras

அது இந்திய மறுமலர்ச்சி தொடங்கிய காலகட்டம். இந்திய நவீன இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருந்தது. கங்கூலியின் மகாபாரத மொழியாக்கம் அதற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. இந்திய நவீன இலக்கியத்தின் ஆரம்பகட்டப் படைப்பாளிகள் பலரும் விரிவான மரபுக்கல்வி பெற்றவர்கள் அல்ல. அவர்கள் ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள். அவர்களுக்கு மரபுத்தொடர்ச்சி ஒன்றை உருவகிக்க அம்மொழியாக்கம் உதவியது. பிரம்மாண்டமான ஒரு படிமக்களஞ்சியமாக அது அவர்களுக்குத் திகழ்ந்தது. இந்தியமொழிகளின் நவீன இலக்கியம் தொடங்கியபோதே மகாபாரதத்தை மறுஆக்கம் செய்யும் வலுவான படைப்புகள் உருவாகி வந்தன

 

மலையாளத்தில் கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான் செய்யுளிலும் வித்வான் பிரகாசம் உரைநடையிலும் மகாபாரதத்தை  மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தமிழில் கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகளால் மொழியாக்கம் செய்யப்பட்டு கும்பகோணம் ம.வீ.ராமானுஜாச்சாரியாரால் தொகுக்கப்பட்ட முழு மகாபாரத ம்  வெளியாகியிருக்கிறது. எல்லா மொழிகளிலும் இத்தகைய மொழியாக்கங்கள் உள்ளன. ஆயினும் சம்ஸ்கிருத மூலத்தை அறுதியாகத் தொகுத்து பாடபேதம் நீக்கிக்கொள்ளவேகூட கங்கூலி மொழியாக்கம் உதவியிருக்கிறது.

 

கங்கூலி பாரதத்தை இணையத்தில் மொழியாக்கம் செய்யும் அருட்செல்வப்பேரரசனின் பணி மிகப்பெரியது. இன்று இணையத்தில் மகாபாரதம் சார்ந்த எந்த ஒரு தேடலுக்கும் அவருடைய மொழியாக்கமே விடை என வந்து நிற்கிறது மகாபாரதத்திலும் நவீன இலக்கியத்திலும் ஆர்வம்கொண்டவர்களுக்கான சந்திப்பு இது

 

மகாபாரதம் முன்னோடி முயற்சிகள்

மகாபாரதம் பற்றி ஜெயகாந்தன்

சமணமும் மகாபாரதமும்

மகாபாரதம் திரையில்…

அரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்

மகாபாரதம் கேள்விகள்

மகாபாரதம் மறுபுனைவின் வழிகள்

மகாபாரதம் – ஒருகடிதம்

முழு மகாபாரதம்

மகாபாரதம் -ஒரு கடிதம்

வி.எஸ்.காண்டேகரின் யயாதி.

ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்?

வெண்முரசு கூட்டம் – அரசன் பதிவு

 

முந்தைய கட்டுரைகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56