மகாபாரதம் பூர்வகதை

kesavamani

அன்புள்ள ஜெயமோகன்,

நலம். நாடலும் அதுவே.

வியாசரின் பாரதத்தில் இதுவரை எழுதியவற்றை “மகாபாரதம் பூர்வகதை” என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன்.

https://kesavamanitp.blogspot.in/2018/02/blog-post_8.html

அன்புடன்,
கேசவமணி

**

அன்புள்ள கேசவமணி

நூல் கண்டேன். நான் வாசித்தவரை மகாபாரத கதைவிவரிப்புகளில் சிறந்தது, நவீன உரைநடையில் அமைந்தது அ.லெ.நடராஜனின் மகாபாரதம்.அ.லெ.நடராஜன் அறுபது எழுபதுகளில் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள், இதிகாச  மறுஆக்கங்கள் , சிந்தனை அறிமுகநூல்கள் முக்கியமானவை. எளிமையான நேரடி உரைநடையில் எழுதப்பட்டவையாதலால் முழுமையான வாசிப்புக்கு உறுதியளிப்பவை. இன்றையசூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப்பொறுத்தவரை வாசிக்கமுடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்கமுடியாது என்பது அனுபவ உண்மை

5934

அந்நூலுக்கு இணையாக எளிய,நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக் கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமைசெய்ய வாழ்த்துக்கள். எழுதிமுடியுங்கள் தமிழில்  ஒரு க்கொடையாக அமையும் என நினைக்கிறேன்

ஜெ

mauna
அன்புள்ள ஜெயமோகன்
நலமா?
மஹாபாரதத்தை ஏன்  எழுதுகிறேன் என்ற உங்கள் கட்டுரை வாசித்தேன்.அருமையானதொரு  கட்டுரை
அது எளிமையாக  இருந்த அதே வேளை கருத்தாழம் கொண்டதாகவும்  இருந்தது
அன்புடன்
மௌனகுரு
***

அன்புள்ள மௌனகுரு அவர்களுக்கு

நலம்தானே?

ஒருவகையில் இன்றைய நவீன கலைச்சூழலில் மகாபாரதம் , ராமாயணம் போன்ற கதைகளை தெருக்கூத்தாக நீங்கள் நடிப்பது ஏன் என்ற கேள்விக்கான விடையும்தான் அது

ஜெ