அஞ்சலி –தகடூர் கோபி

thagadur

அஞ்சலி –தகடூர் கோபி

அன்பிற்குரிய நண்பர் தகடூர் கோபாலகிருஷ்ணன் 41 வயதில் மறைந்துவிட்டார். மகள், மகன், மனைவிக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நாங்கள் எல்லாம் யூனிகோட் எழுதுருவை தமிழின் எழுதுரு ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது தகடூர் கோபியின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது.

உயர்நிலைப்பள்ளிகள் எல்லாவற்றிலும் இணையத்தில் வலைப்பதிவுகள், … எழுத விருப்பப்பாடமாக தமிழில் தட்டெழுதுதல், ப்ளாகர், வொர்ட்ப்ரெஸ், முகநூல், ட்விட்டர், … பற்றிய அறிமுகம் வைப்பதை தமிழ்நாடு அரசு செய்தால் கோபி போன்றோருக்குச் செய்யும் நல்ல அஞ்சலியாய் அமையும். ஊர் ஊருக்கு ஒரு சில மாணவர்களாவது தங்கள் வட்டார மக்கள் எழுதிய, அதிகம் அறியப்படாத நூல்களை பிடிஎஃப் செய்து இணையத்தில் வைத்தாலும் நல்லது.

*

காலமானார் தகடூர் கோபி – தினமணி

“தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தணிகாசலம் என்பவரின் மகனான இவருக்கு, மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். கணினி பொறியியலில் பட்டம் படித்துள்ள இவர், சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மென்பொருள் துறையில் பணியாற்றியுள்ளார்.

இணைய உலகில் அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை இவர் வெளியிட்டுள்ளார்.. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை கோபி உருவாக்கியுள்ளார்.”

*

மு. இளங்கோவன் எழுதியுள்ளார்:

தகடூர் கோபி அஞ்சலி மு. இளங்கோவன்

தகடூர் கோபி அஞ்சலி மு. இளங்கோவன்-வலைத்தமிழ்

*

கீதா சாம்பசிவம்:

தகடூர் கோபி –  அஞ்சலி – கீதா சாம்பசிவம்

*

பா.ரா.

தகடூர் கோபி – அஞ்சலி – பா.ரா

*

தமன்னாவை தெரியும், தகடூர் கோபியை தெரியுமா?

தகடூர் கோபி – அஞ்சலி – செய்தி புனல்

*

குமாரசாமிப்பேட்டைக் குமாரன் தகடூர் கோபியை நவீனக் கணினி யுக உலகத் தமிழ் சமுதாயம் வணங்குகிறது. அவர் தமிழர்க்கு அளித்த கொடையை மறவோம். தமிழ் தாய்க்கு இது போல் குழந்தைகள் இனியும் பிறக்கும், பிறக்க வேண்டுமென்பதே நம் அவா. குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். – கமல்ஹாசன், ட்விட்டரில்.

*

இந்தியாவின் செம்மொழிகள் இரண்டு – தென்மொழி செந்தமிழ், வடமொழி, விருப்பமிருப்போர் வடமொழிப் புலமை அடையலாம் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க்காது. காலமெல்லாம், ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்த லிபிகளிலே வடமொழி பயிலப்பட்டு வந்தது. அதை விடுத்து வடநாட்டாரும், மத்திய அரசும் ஹிந்தி லிபியைப் புகுத்துதலிலேயே குறியாய் உள்ளது. இது யூனிகோட் என்னும் ஒருங்குகுறியீட்டின் யுகம். மொபைல் போன்களில் கூட மென்கலனை நிறுவி, அப்ஸ் வைத்து ஒரு இந்திய லிபியில் உள்ளனவற்றை மற்றோர் லிபியில் படிக்கலாம். வடமொழி படிக்க தமிழர்கள் 1500 ஆண்டுகளாக வைத்திருப்பது கிரந்தம் லிபி ஆகும். ஹிந்தி ஒரு பிராந்திய லிபி, எல்லா லிபிகளும் சரிநிகர் சமானமே. தமிழ் அல்லா பிற இந்திய மொழிகளை (உ-ம்: மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒரியா,.) கிரந்தலிபி உதவும் நிலை உருவாக வேண்டும். ஹிந்தி லிபிக்கு மாத்திரம் முன்னுரிமை, மற்ற இந்திய லிபிகட்கு மாற்றாந்தாய் நடவடிக்கை என அல்லாது மத்திய அரசை எல்லா இந்திய லிபிகளும் சமம் என்ற நிலையை ஏற்படுத்த குஜராத், ஒரியா, 4 தென் மாநிலங்கள், பஞ்சாப் முதல்வர்கள் முன்னெடுக்க வேண்டும். திருக்குறள் தூதர் தருண் விஜய் போன்றோர் விளக்கினால் கேட்பர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் யூனிகோட், ஒரு இந்திய லிபியில் இருந்து மற்றோர் லிபிக்கு மாற்றும் மென்கலன்களுக்கு தகடூர் கோபி போன்றோர் முயற்சிகள் பேசவேண்டும். பா.ஜ.க இருந்தாலும், காங்கிரஸ் இருந்தாலும் யூனிகோட் யுகப்புரட்சி மூலம் எல்லா இந்திய இலிபிகளும் சரிநிகர் சமானம் ஆகவேண்டும்

நான் ஒரு லிபியில் இருந்து இன்னோர் லிபிக்கு மாற்ற வசதி வேண்டும் என்று கேட்டபோது அதை முதலில் செய்தவர் கோபி தான். அவரது 2006 மடலை இணைக்கிறேன். நண்பரே, போய் வாரும். வள்ளுவன் சொன்ன வாழ்க்கை நிலையாமை நினைத்து ஏங்குகிறோம்.

ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு:

https://groups.google.com/forum/m/#!msg/illam/rRahfYJ_rVU/e3KaKyvu3UQJ

நா. கணேசன்

***

முந்தைய கட்டுரைகாவிய வாசிப்பு -கடிதம்
அடுத்த கட்டுரைமாத்ருபூமி இலக்கியவிழா