ஜெ..
1000 கி,மி ஓடி வந்து மழைக்குள் மாட்டிக் கொண்டேன். அருணனின் பிறந்த நாளுக்காக.
ஆனால், இம்மழையை சென்னை எதிர்கொண்ட விதம் பார்த்து மகிழ்ந்து போனேன்.
சென்னை ஒரு தாழ்வான பகுதி.. ஒரு நாளில் 10 செ.மீ மழை அதிகம். ஆனால், இப்பேய் மழையிலும் சிக்னலுக்கு சிக்னல் நின்று பணிபுரிந்த போக்குவரத்துக் காவலர்களும், மிக முக்கிய சாலைகளின் வடிகால் வசதியும் கண்டு அசந்து போனேன்.
இதை விடக் குறைவான மழை நிகழ்த்தும் மோசமான போக்குவரத்து நெரிசல்களை மும்பையில் அனுபவித்திருக்கிறேன். அங்கே அலுவலகம் செல்வதே ஒரு சாதனை போல் போற்றப் படும் விஷயம்.. அதை வேறு பெருமையாக spirit of Mumbai என்று சொல்லிக் கொள்வார்கள்..
செனடாப் ரோட்டில் இருந்து டைடல் பார்க்கில் உள்ள என் மனைவியின் அலுவலகத்துக்க்கு 25 நிமிடங்களில் சென்றேன். போக்கு வரத்து எங்கும் நிற்கவில்லை. மிகச் சிறப்பான க்ரைஸிஸ் மேனெஜ்மெண்ட் என்று சொல்வேன்.
பாலா
அன்புமிக்க ஜெயமோகனுக்கு,
சினிமாவின் அத்தனை நீளமான கதையாடல்களையும் அடர்த்தியாக்கி, தேவையான தருணத்தை, உச்சத்தை, உணர்வைச் சொல்லக்கூடியதாகக் குறும்படம் இன்று பார்க்கப்படுகிறது. மலேசியாவில் அண்மையில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நடத்தியக் குறும்படப் போட்டியில் சிறந்த 10 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளியேற்றவும்பட்டன. அந்தக் குறும்படங்களையொட்டிய விமர்சனத்தை அண்மையில் எழுதினேன். டிசம்பர் வல்லினத்தில் பிரசுரமாகியுள்ளது.
http://www.vallinam.com.my/issue24/review4.html
மிக்க நன்றி,
அன்புடன்
கே.பாலமுருகன்
மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/
அன்புள்ள பாலமுருகன்
கட்டுரை வாசித்தேன். குறும்படங்களை ரசிக்கும் மனநிலை எனக்கு ஏனோ இன்னும் வரவில்லை. அவற்றில் ஒரு பயில்முறை சாத்தியம் உள்ளது. வணிக நோக்கு, கட்டாயம் இல்லாத காரணத்தால், நிறைய விஷயங்களைப் புதிதாக செய்யமுடியும். கிட்டத்தட்டச் சிற்றிதழ் போல. ஆனால் நான் பார்த்த எந்தத் தமிழ்க் குறும்படமும் எனக்கு எந்த ஆர்வத்தையும் உருவாக்கவில்லை. அவை பெரிய படங்களைப் பார்த்துப் பயிற்சியில்லாமல் எடுக்கப்பட்ட குழந்தை முயற்சிகளாகவே இருந்தன
ஜெ
சார்
சதங்கை – னு ஒரு பத்திரிக்கை நான் பள்ளியில் படிக்கும் போது படித்து இருக்றேன் .அதன் ஆசிரியர் பெயர் வனமாலிகை னு நினைகிறேன். அவர் என் வீடு அருகில் தான் இருந்தார் – கவிமணி நகர் ,நாகர்கோயில்.
Once he asked my father to give advertisement for the சதங்கை…. I remember his face till now…
நீங்கள் அவரைச் சந்தித்ததுண்டா.Sorry for asking this , as nowhere u mention his name …
regardz
karthika Petchinathan
அன்புள்ள கார்திகா பேச்சிநாதன்
நான் வனமாலிகையை நன்றாகவே அறிவேன். அவர் சதங்கையை இரண்டாம் முறை கொண்டு வந்தபோது நான் அதனுடன் நிறைய ஒத்துழைத்தேன். அனேகமாக எல்லா இதழ்களிலும் எழுதியிருக்கிறேன். அவரைப்பற்றி சுரா நினைவுகள் போன்ற வேறு கட்டுரைகளில் எழுதியதோடு சரி. எழுதவேண்டும்
ஜெ