பார்சல் பெருமாள்!

dig

8903916753 –இந்த எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. திருப்பதி திருமலை கோயிலில் இருந்து அழைப்பதாக ஒரு பிராமணப் பெண்குரல் பேசியது. திருப்பதியில் இப்போது முக்கியமான பூசை நடந்துகொண்டிருப்பதாகவும் அதில் லட்சுமிசிலை, ஸ்ரீசக்ரம் உட்பட முக்கியமான சிலவற்றை வைத்து பூசை செய்வதாகவும் திருமலைதேவஸ்தானத்தில் அதை வாங்க ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்றும் ஆனால் என் எண் குலுக்கலில் பெருமாள் முன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனால் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அவற்றை எனக்கு ஆசியுடன் அளிக்கவிருப்பதாகவும் அம்மையார் சொன்னார்.

அவற்றை எனக்கு தபாலில் அனுப்புவதாகவும் பொட்டலம் பெறும்போது பணம்கட்டி பெற்றுக்கொண்டால்போதும் என்றும் அன்போடு சொன்னார்கள். நான் பக்தன் அல்ல என்று சொல்லிவிட்டேன். பக்தி இனி வரலாமே என்றார்கள். வந்தபின் அழைக்கிறேன் என்றேன். பெருமாள் அருளை வீணடிக்கவேண்டாம் என்றார்கள். நான் சைவன் என்றேன். சரி என்று நிறுத்திக்கொண்டார்கள்.

உண்மையில் ஆரம்பத்தில் கடும் எரிச்சல் வந்தது. திருப்பதி ஆலயநிர்வாகம் இதைச்செய்வதென்றால் கீழ்மை என நினைத்தேன். பின்னர் இது ஏமாற்றுவேலைதான் என உறுதிகொண்டேன். ஆனால் பேசிமுடித்தபின் மீண்டும் ஐயம், ஒருவேளை திருப்பதியேதானோ? காலம் கிடக்கிற கிடைக்கு…

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50
அடுத்த கட்டுரைஅரசியல்படங்கள் கடிதங்கள்