நந்தகுமார் வலைப்பூ

DSC_0101

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உண்மையில் எளிதில் எதற்கும் சுருங்கிக் கொள்பவனாக உணர்கிறேன். ஆனால் அதனாலேயே செயல் படாமல் போய் விடுவேனோ என்ற பயமும், அடிமண்டிய சதுப்பைப் போல கொள கொளவென்று ஆக்கியிருக்கிறது. விமர்சனங்களையும் எதிர்வினைகளையும் ஏற்கும் தைரியமற்ற எனது சுபாவம் கழிவறையில் தலை மேல் வெறித்து நோக்கும் பல்லியைப் போல அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஆனால் நான் ஏதோ எனக்குள் செய்து கொண்டிருக்கிறேன் எனக்காக என்பது மட்டுமே ஒரு சிறிய ஆசுவாசம். இன்றளவும் இதன் மேல் எந்த நம்பிக்கையும் எனக்குமில்லை. இருந்தாலும் ஒரு சிறிய விளக்குத்திரியில் அமிழாமல் காத்திருக்கும் கடைசி நொடி ஒளியைப் போல எழுத்தாளர்-அய்யனார் விஸ்வநாதன், நன்றாகத்தானே இருக்கிறது நீ ஒரு வலைப்பூ ஆரம்பி. அது உனக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என்றார். உங்களின் பாதிப்பும் என்னுடைய மொழியில் அதிக அளவில் உண்டு. நான் ஒரு எழுத்தாளனாக இன்னும் உணரவில்லை என்பதே இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான எதிர்வினைகளிலிருந்து என்னை நான் அவதானிக்க வேண்டும். இல்லையென்றாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
என் வலைப்பூ

ஒளியிலிருந்து இருளை நோக்கி

அன்புள்ள நந்தகுமார்,

இலக்கியத்தில் தன் மொழியைக் கண்டடைவது பெரிய சவால். அது புறவயமானதாக ஆவது அடுத்த சவால். முதல்கட்டத்தில் இருக்கிறீர்கள். நேரடியாக, அந்தரங்கமானதாக இருக்கும் நடை ஒரு பலமே. அது எவருக்கும் புரியவில்லை என்றாலும் நமக்கு வெளிப்பாட்டு நிறைவை அளிக்கும். மாறாக முகநூல், வார இதழ் பொதுநடைகளில் சிக்கிக்கொள்வதே  பேரவலம்.

இந்நடை மேலும் புறவயமானதாக ஆவதற்கு எதிர்வினைகள் உதவுக

ஜெ

எழுத்தாளன் ஆவது

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51
அடுத்த கட்டுரைகஞ்சி -கடிதங்கள்