அரசியல்படங்கள் கடிதங்கள்

Michelangelo_Antonioni_Cropped

 

தமிழில் அரசியல்படங்கள்

அன்புள்ள ஜெ.,

 

இன்னும் ஜனநாயகமே தமிழ் நாட்டில் வரவில்லை எனும் போது அரசியல் படங்கள் எப்படி வரும் ?

 

1995-ல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த “மக்களாட்சி” படம் அளவிற்கு கூட இப்போது எடுக்க முடியாது என்பதே எதார்த்தம்..

 

மீறினால், வரிவிலக்கில் விதிவிலக்கு; திருட்டு தமிழில் அரசியல்படங்கள் விசிடி, வெளிவரவே தடை என்று அந்தப் படத்தை முழுமையாகவே நசுக்கிவிட முடியும்.

 

இணையம் மூலம் மக்கள் அதிக அளவில், அதிக துணிச்சலோடு அரசியலை பகடி செய்ய, விமர்சனம்  செய்ய  ஆரம்பித்திருக்கின்றனர்.. இப்போது வரும் meme-களை ஒன்றாக்கி ஒரு படம் செய்தால் கூட மக்களால் அது பெரிதும் விரும்பப்படும்.. ஆனால், அப்படி எடுப்பதற்கு முதலில் நமக்கு ஜனநாயகம் வேண்டும்..

 

நன்றி

ரத்தன்

 

 

அன்புள்ள ஜெ

 

தமிழில் அரசியல் படங்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வாசித்தேன், மிகச்சிறந்த அரசியல்படம் எனப்படுவது அந்த அரசியலை அறியவேண்டிய மக்களுக்குச் சற்றும் புரியாத ஒன்று என்ற வகையில் பி.ஏ.பக்கர் சொல்லியிருந்த வரி சிரிப்பை வரவழைத்தாலும் அதில் உண்மை இருப்பதாகவும் தோன்றியது. ஏனென்றால் நல்ல கலைப்படைப்பு எந்த அளவுக்கு நுட்பமாக ரசிகனுக்கு இடம் அளிக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அது முக்கியமானதாக ஆகிறது. ஆனால் அரசியல் விழிப்புணர்வுபெறவேண்டிய மக்களோ அடித்துச்சொன்னால்தான் கேட்பார்கள். அவர்களை நோக்கி எடுக்கப்படும் படைப்பு உரக்கக் கூச்சலிடுவதாகத்தான் இருக்கும். அதாவது இங்குலாப் கவிதைபோல. உடனே உங்களைப்போன்றவர்கள் அதை கலைப்படைப்பே இல்லை என்று சொல்லிவிடுவீர்கள்.

 

ராஜாராம்

 

ஜெ,

தமிழில் இன்று அரசியல்படங்களே வரமுடியாது. ஏனென்றால் அரசியல்படங்கள் நேரடியாக அரசியலைச் சொல்லி விமர்சித்தாகவேண்டும். இங்கே எவரை விமர்சித்தாலும் கொடிபிடிக்கிறார்கள். அந்தப்படத்தை தடைசெய்யக் கோருகிறார்கல். மக்களில் 2 சதவீதம் பேர் நினைத்தாலேபோதும் சினிமாவை நிப்பாட்டிவிடமுடியும் என்றநிலை. ஆகவே மிகப்பொத்தாம்பொதுவாக எங்குமில்லாத ஒரு வில்லனை எதிரியாகக் காட்டி சினிமா எடுக்கிறார்கள். அரசியல் அந்தவகையில் மாறிவிட்டிருக்கிறது

 

கணேஷ்குமார்

முந்தைய கட்டுரைபார்சல் பெருமாள்!
அடுத்த கட்டுரைகலையில் அதிவன்முறை