எந்தப் பண்பாட்டுச் சூழலிலும் அரிதாகவே முதன்மைப் பெரும்படைப்பாளிகள் தோன்றுகிறார்கள். அரிதாகவே அவர்கள் சமகாலத்தில் உரிய மதிப்பைப் பெறவும் செய்கிறார்கள். ஐயமின்றி ஈழ இலக்கியச் சூழல் உருவாக்கிய முதன்மைப் பெரும்படைப்பாளி அ.முத்துலிங்கம்தான். தமிழிலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளின் நிரையில் அவருக்கு இடமுண்டு.
மெல்லிய நகைச்சுவையும் சொல்லாதவற்றால் ஆன படலமாக கண்டுகொண்டவற்றை அமைக்கும் கலைத்திறனும் கொண்ட படைப்புகள் அ.முத்துலிங்கம் எழுதுபவை. அனைத்துக்கும் மேலாக தமிழ்ப்படைப்பாளிகளில் அவர் ஒருவரே உலகமனிதன். எந்த நாகரீகத்தின் மேலும் இளக்காரம் சற்றும் அற்ற நோக்கு கொண்டவர். ஏனென்றால் தன் நாகரீகத்திற்குள் தன்னைக் குறுக்கிக் கொள்ளாதவர். எளிய பற்றுகளுக்கும் காழ்ப்புகளுக்கும் அப்பாற்பட்டவர். அவருக்கு முன் அப்பண்பின் தொடக்கநிலை தென்பட்டது தமிழ்ப்படைப்பாளிகளில் ப.சிங்காரத்திடம் மட்டுமே. நாளை உருவாகப்போகும் தமிழ்ப்படைப்பாளிகளின் மாதிரிவடிவம் அவர்.
அ.முத்துலிங்கம் எழுதவந்து அறுபதாண்டுகள் ஓர் அருநிகழ்வு. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வணக்கம்
ஜெ
*
அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்,
கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள்நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நாள்: 21-04-2018
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 8:00 வரை
இடம்: தமிழ் இசைக் கலாமன்றம்
Unit# 3, 1120 Tapscott Road,
Scarborough, Ontario, M1X 1E8
Canada
(Tapscott / McNicoll Ave)
தொடர்புகளுக்கு: 1 416 822 6316
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நிகழ்வைப் பற்றிய மேலதிக விபரங்கள்பி ன்னர் அறியத்தரப்படும்
நன்றி.
விழாக்குழு
முந்தையவை
ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்
அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்
அயினிப்புளிக்கறியும் அ.முத்துலிங்கமும்
அ.முத்துலிங்கமும் அனோஜன் பாலகிருஷ்ணனும்
அ.முத்துலிங்கமும் தாயகம் கடந்த தமிழும்
ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்
அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு
சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து