உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்

RoyMoxham (1) உப்புவேலி

வணக்கம்,

 

ராய் மாக்ஸாம் எழுதி சிறில் அலெக்ஸ் மொழிபெயர்த்த ”உப்பு வேலி” நூல் தற்போது எங்கும் கிடைக்கவில்லை. எழுத்து பதிப்பகத்தையும்  தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லவிருக்கிறேன். அங்கு எங்காவது இந்நூல் கிடைக்குமா ?

பழைய நூலாக இருந்தாலும் யாரிடம், எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்பதை தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

 

விவேக்

 

அன்புள்ள விவேக்

 

உப்புவேலி மறைந்த நண்பர் அலெக்ஸ் அவர்களால் எழுத்து பிரசுரம் சார்பில் வெளியிடப்பட்டது. இப்போது அச்சில் இல்லை. விரைவில் கிழக்கு வெளியீடாக வரக்கூடும்

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

தங்களது இலக்கிய முன்னோடிகள் புத்தகத்தை நவம்பரே முன்பதிவு செய்தேன், இன்னும் வரவில்லை, நற்றிணை பதிப்பத்தாரிடம் மின்னஞ்சலில் கேட்டேன், இன்னும் அச்சடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். உண்மையில் என்ன பிரச்சனை என்று உங்களுக்கு தெரியுமா?

 

சந்திரமௌலி  ராமு

 

அன்புள்ள சந்திரமௌலி

 

புத்தகக் கண்காட்சி நெருக்கடி காரணமாக நூல் தயாராக சற்று தாமதமாகியது. பெரிய நூல் என்பதனால் அட்டை அமைப்பது தாமதம். நூல் தயாராகி வந்துவிட்டது என்றும் இருநாட்களில் அனுப்பிவைக்கப்படும் என்றும் யுகன் நற்றிணை தெரிவித்தார்

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46
அடுத்த கட்டுரைவாழ்க்கையிலிருந்து பேசுவது…