ஈவேரா -உண்மைகள்

evr

 

அன்பு மிக்க ஜெயமோகன் சார் அவர்களுக்கு ,

 

வணக்கம் .

 

சமீப காலமாக தந்தை பெரியார் பற்றி பத்திரிக்கைகளிளும் ஊடங்களிளும் தெரிந்தோ தெரியாமலளோ புகழ்ந்து பேசி வருகிறார்கள். அவரை வரலாற்று நாயகனாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் பார்வை வேறாகத் தெரிகிறது. ஓர் இளம் வாசகனாகக் கேட்கிறேன் உண்மையில்  பெரியார் வரலாற்று நாயகனா , மற்ற தலைவர்களிடம் இருந்து ஈ.வே.ரா எவ்வாறு மாறுபடுகிறார், அவரைப் பற்றி தற்காலதமிழ்ச் சமூகம் எவ்வாறு பார்க்கிறது. அவரைப் பற்றி உண்மையாக அறிந்து கொள்வதற்கு எந்த புத்தகம் உதவும் என்பதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும். நன்றி .

முத்துமாணிக்கம்

 

அன்புள்ள முத்துமாணிக்கம்

 

நம்மிடையே கறாராக வாழ்க்கைவரலாறு எழுதும் வழக்கம் இல்லை. துதிப்பாடல்களையே வாழ்க்கை வரலாறு என எழுதுகிறோம். அரசியல் சித்தரிப்புகளையே வரலாறு என்கிறோம். மெய்யான பகுத்தறிவுடன் கிடைக்கும் தரவுகளை ஆராய்வது மட்டுமே உண்மையை அணுகும் வழி

நான் ஈவேரா என்னும் ஆளுமை முழுக்கமுழுக்க அரையுண்மைகளாலும் முழுப்பொய்களாலும் இடைநிலைச் சாதி ஆதிக்க அரசியல்தேவைகளின்பொருட்டு புனையப்பட்ட ஒன்று என நம்புகிறேன். கிட்டத்தட்ட அனைத்தையும் முழுமையாகவே வாசித்தபின்னர்

உதாரணமாக இப்போது ஈவேராவின் நயத்தக்க நாகரீகம் பற்றி பன்னிப்பன்னி பேசுகிறார்கள். அவர் எவரையும் வசைபாடியதில்லை, கொள்கைகளைத்தான் எதிர்த்தார் என்கிறார்கள். அவர் எங்கோ கடவுள்வாழ்த்துக்கு எழுந்து நின்றார் என கதை புனைகிறார்கள். ஆனால் உண்மையில் ஈவேரா காந்தி,நேரு,அம்பேத்கர் உள்ளிட்ட தன் கால நாயகர்கள் அனைவரையுமே மிகக்கீழ்மையாக விமர்சனம் செய்தவர். அவையனைத்தும் இன்றும் வாசிக்கவே கிடைக்கின்றன. அவர் நடத்திய விடுதலை நாளிதழ் பக்கங்களிலேயே.

உதாரணம் அவர் கிருபானந்தவாரியார் பற்றி பேசியது. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களால் எடுத்துக்காட்டப்பட்டது

“இந்தக் கிருபானந்தவாரியார் எத்தனை காலிப்பயல். எத்தனை பாப்பாத்தியை கெடுத்திருக்கிறான். எத்தனை பெண்களைக் கெடுத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். பேசும் போதே பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பான். இன்று அவன்தான் பெரிய மனிதன். காந்தி வழி நடப்போம், வெங்காய வழி நடப்போம் என்கிறானே! என்ன காந்தி வழி? அவரால் ஒரு ஊசி முனை அளவு கூட நம் மக்களுக்கு நன்மையில்லையே”
– விடுதலை 08.04. 1969

இதைப்போன்றவற்றைச் சுட்டிக்காட்டினால் அவர் ஏன் சொன்னார், எந்தச்சூழலில் சொன்னார் என்று பார்க்கவேண்டும் என வாதிடுவார்கள். இதற்கிணையாக எவரையேனும் காந்தியோ நேருவோ அம்பேத்கரோ சொல்லியிருந்தால் இவர்கள் அதை எப்படியெல்லாம் கொண்டுசென்றிருப்பார்கள் என்று பார்த்தால் இவர்களின் கயமைபுரியும்

ஈவேராவை போற்றுபவர்கள் இடைநிலைச்சாதிக்கு ஆதரவானவர் என அவரை நினைக்கின்றனர். அதற்குரிய அரசியலை அளித்தவர் என. அதோடு அவருடைய இந்த கீழ்மையான வசைபாடல் மரபை தாங்களும் ஏற்று ஒழுகுகின்றனர்

ஜெ

 

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

ஈவேரா?

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

சந்திரசேகரரும் ஈவேராவும்

ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்

ஈவேரா: கடிதம்

பெரியார் அவதரித்த புனித மண்!

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

வரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்

பெரியார்- அறிவழகனின் கடிதம்

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்

கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2

கல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1

 

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2

வைக்கமும் ஈவேராவும்

வைக்கமும் காந்தியும் 2

வைக்கமும் காந்தியும் 1

பெரியார்-ஒருகடிதம்

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49
அடுத்த கட்டுரைபத்மாவதி -கடிதங்கள் 2