வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு

thaya

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும் ஒரு பார்வை பார்த்தார். கூலிம் பிரம்மானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இரண்டு நாட்களுக்கான இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில்தான் இது நடந்தது.

வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமண்மணம்