சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

 

 

 suneel.jpg

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு வாசிப்பு சென்ற ஆண்டின் இறுதி நாட்களை தீவிரமான மறக்க முடியாத அனுபவமாக்கியது. எனது வாசக அனுபவப் பதிவு உங்கள் பார்வைக்கு.

முதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உச்ச தருணங்களும், மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது. மரணக் குறிகளை முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் கொடியையும் ஏந்தியபடி அரூபமாக நெருங்கும் மரணம், இடைநில்லா துயரப் புனலில் விழுந்த சருகிலை போல அலைகழிக்கப்படும் மனிதர்களின் ஒரு தொகுதியை வாரி எடுத்துக் கொண்டு சுழித்த படி மறைவதும், உதிரிகளை பழிப்பு மட்டும் காட்டிவிட்டு உதறிச் செல்வதும் சுனில் கிருஷ்ணனின் கதைகளில் வேறு வேறு களங்களில் நிகழ்கின்றன

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுவம்

என்றும் அன்புடன்

உங்கள் வாசகன்,

சிவமணியன்

ambu padukkai1 (1)

சுனில் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை தொகுதி குறித்து காளிப்பிரசாத் எழுதிய மதிப்புரை

பணமும் பாசமும் அறிவியலும் விதியின் முன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் வாசுதேவன் கதையின் மூலம் அறிமுகமான சுநீல் தன் பேசும்பூனை கதைமூலம் கணையாழியின் சிறந்த குறுநாவலுக்கான பரிசைப் பெற்று, ஜெயமோகன் காதில் புகை வரும் அளவிற்கான எழுத்தாளராய் வந்து நிற்கும் பயணமே இந்த அம்புப்படுக்கை தொகுதி.

அம்புப் படுக்கை – சுநீல் கிருஷ்ணன்

 

முந்தைய கட்டுரைஎதிர்ப்பும் ஏற்பும் –கடிதங்கள்.
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸின் அரசியல்