தமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்

தமிழ் ஹிந்து நாளிதழ் நடத்தும் தி ஹிந்து லிட் ஃபெஸ்ட் நிகழ்ச்சிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.  ஒரு பிரபலநாளிதழ் இத்தகைய இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் விருதுகள் வழங்குவதும் அனைத்துவகையிலும் இலக்கிய மறுமலர்ச்சிக்கு உதவுவது. இது மேலும் வெற்றிகரமாகத் தொடரவேண்டுமென விரும்புகிறேன்.

எனக்கு இதற்கான பொது அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் என் முகவரியை நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களுடன் இணைத்து ஒட்டுமொத்தமாக இந்த அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வாசகரும் அனுப்பும் மறுமொழிகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை எனக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக நான் தடுக்கவேண்டியிருக்கிறது. தி ஹிந்து ஆசிரியர் குழுவிலுள்ள ஆசைத்தம்பி தேசிகமணி என்பவரும் சிலரும் இதை அனுப்பியிருக்கிறார்கள்.

என் மின்னஞ்சல் முகவரி பொதுவான ஒன்று. பிரபலமானதும்கூட. தயவுசெய்து அதை இம்மாதிரியான பொதுக்குவியல்களில் இணைக்கவேண்டியதில்லை என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வந்துசேரும் மின்னஞ்சல்களிலிருந்து தேவையற்றதைக் களையவேண்டியிருக்கிறது, இது மிகப்பெரிய வேலை. இது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல, இம்மாதிரி பிற எழுத்தாளர்களின் மின்னஞ்சல்களைச் சேர்த்திருந்தாலும் அதை நீக்கிவிடவும்.

ஜெ

முந்தைய கட்டுரைஒர் அழைப்பு
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21