தூய்மை!

main-qimg-7afe3124e304c0360cf3ff8cd6989b9f-c
உபியில் ஸ்வச் பாரத்க்கிற்காக கட்டப்பட்ட கழிவறைகள் இப்பொழுது கிடங்குகளாக பயன்படுத்தப்படுகின்றன. இப்படி மக்கள் இருக்கையில் என்ன செய்ய முடியும்

https://www.quora.com/Has-the-Swachh-Bharat-mission-failed-in-India/answers/68085549?srid=tiqZ

ராம குமரன்

***

வணக்கம் ஜெ,

‘தூய்மை பாரதம்’ (http://www.jeyamohan.in/103638) பதிவில் என் கடிதத்திற்கு பதில் தந்திருந்தீர்கள்.

இந்தத் திட்டத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்தியா போன்ற சுகாதர பிரக்ஞை குறைவாக உள்ள நாட்டில் இது புரிந்துகொள்ளக் கூடியதே.
குப்பைகளை ஊருக்கு வெளியில் கொண்டு கொட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை எப்படி பிராசஸ் செய்கிறோம் என்பதில் ஏற்படுத்தப்பட வேண்டிய முன்னேற்றங்கள், அதில் நிபுணர்களை ஈடுபடுத்துதல்,  ஸ்டாலின் மேயராக இருந்தபோது தனியார் நிறுவனத்தின் மூலம் சரியாகக் குப்பைகளை அள்ளி சென்னையை சுத்தமாக வைத்திருந்தது (அப்போதும் பிரசாசசிங் பெரிதாக இல்லைதானே?)
ஆகியவற்றுடன் உங்கள் கருத்துகளோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.

குடும்பக் கட்டுப்பாடு போல இது அரசின் பிரச்ச்சாரம் மட்டும்தானா எனக்கேட்டிருந்தீர்கள்.  நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல, ‘ஆம்’, விழிப்புணர்வுதான் இத்திட்டத்தின் தலையாய நோக்கம். அதனால்தான் மோடி இதில் மக்கள் பங்கெடுக்க வேண்டும் என்றார்.
ஏனெனில் நம் நாட்டைப் பொருத்தவரை நம் வீடு சுத்தமாக இருந்தால் போதும் எல்லாவற்றையும் சாலையில் கொட்டிவிடலாம் என்ற எண்ணமே அதிகம்.  டீக்கடைகள்,  பேருந்து, ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அருகிலேயே குப்பைக்கூடைகள் இருந்தாலும் அலட்சியமாக இருந்த இடத்திலேயே  குப்பை போடுவோரைப் பார்க்கிறோம்.
என் குடும்பத்தினரிடமே கூட இது தவறு எனச்சொல்லி புரியவைக்க முடியாத நிலை இருந்தது. ‘குப்பை மகேஷ்’ என்று எனக்குப் பட்டப்பெயர் கிடைத்ததுதான் மிச்சம். பல குடும்பங்களிலும் இந்த நிலை இருந்திருக்கும், தற்போதும் இருக்கும்.
இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் மூலம் என்ன நடந்திருக்கிறது?

-> இதைப் பற்றி மக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
-> வட மாநிலத்தில் இருந்து வரும் என் அலுவலக நண்பன், முன்பை விட தற்போது ரயில் நிலையங்கள் தூய்மையாக இருக்கின்றன என்கிறான். மக்கள் குப்பைகளா தண்டவாளங்களில் விட்டெறியாமல் கூடைகளில் போட முன்வருகிறார்கள்.
-> முன்பெல்லாம், ‘இங்க போடாதீங்க, அதோ அந்தக் கூடையில போடுங்க’ என்று தலையிட்டுச் சொல்வதற்கு தயக்கமும் ஏன் பயமும் கூட இருந்தது.  இப்போது அந்த பயம் குறைந்திருக்கிறது.
-> நம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர் நாம் சொல்வதைக் கொஞ்சம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவை ஏதோ அற்பமானவையாகத் தோன்றினாலும் இவையே கூட ஏன் முக்கியமாகின்றன? ஏனெனில் நம்மவர்களின் இயல்பு அப்படி. சிங்கப்பூர் போன்ற நாடுகளிலேயே கூட இந்தியர்கள் 4 ஓரிடத்தில் கூடி பேசினால் அவர்கள் நகர்ந்த பிறகு அங்கு குப்பை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த TedEx presentation-ஐப் பார்த்தால் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். https://www.youtube.com/watch?v=tf1VA5jqmRo&t=19s

கழிவறைகள் கட்டும் திட்டத்தைப் பொறுத்தவரை ஒரு சோற்றுப் பதமாக சில செய்திகளைப் பகிர்கிறேன்.
-> அக்சய் குமாரை வைத்து ஒரு பாலிவுட் திரைப்படமே எடுக்கும் அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. https://en.wikipedia.org/wiki/Toilet:_Ek_Prem_Katha
-> தமிழ் நாட்டில் திருச்சிக்கு அருகிலிருந்து செயல்படும் சேவாலயா தொண்டு நிருவனம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கழிப்பறைகளை இத்திட்டதின் மூலம் கட்டியுள்ளது.
-> இது போன்ற பல தனி  நபர் முன்னெடுப்புகள் செய்திகள் வருகின்றன. https://www.ndtv.com/india-news/105-year-old-kunwar-bai-who-sold-her-goats-to-build-toilets-made-swachh-bharat-abhiyan-mascot-1458314

நன்றி,
சாய் மகேஷ்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17
அடுத்த கட்டுரைஒரு வாழ்த்து