அழகியமரம்

1

‘அழகிய மரம்’ 18-19ஆம் நூற்றாண்டுகளில் பாரம்பரிய கல்வி பற்றிய பிரிட்டிஷாரார்கள் ஆய்வுகளில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பம்பாய் பிரஸிடன்சி (1820), மதராஸ் பிரஸிடன்சி (1822-25), வில்லியம் ஆடம் (1835-38) மற்றும் பஞ்சாப் மாகாணம் பற்றிய லெயிட்னர் (1882), ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட வாதங்களிலிருந்து தொடங்குகிறது, சுதேச சிந்தனையாளர்கள் முக்கியமாக மகாத்மா காந்தி அவர்கள் 1931 ஆம் ஆண்டு முதலாம் வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டனிலிருக்கையில் ஒரு உரைக்காக அழைக்கப்படுகிறார் அங்கு காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதியான ‘இந்திய கல்வி கடந்த 50-100 வருடங்களில் அழிவதற்கு பிரிட்டிஷ் அரசு காரணம்’ என்பதை மறுத்து விவாதம் தொடங்கும் சர் பிலீப் ஹெர்டாக், இவர் பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வி தொடர்பான குழுக்களில் உறுப்பினராகயிருந்திருக்கிறார். பின் 1932 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இந்த விவாதங்கள் வரை நீண்டு நிறைவு பெறுகிறது.

1

ஒற்றை வரியில் சொல்லிவிடக்கூடிய கருத்தை அதன் வீரியம் குன்றாமல் இருக்க இத்தனை அறிக்கைகள், தரவுகள் மூலம் தொய்வில்லாமல் தந்திருப்பது சிறப்பு

பி ஆர் மகாதேவன் மொழியாக்கம் செய்த,  தரம்பால் எழுதிய, அழகிய மரம் என்னும் நூல் குறித்து….  

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18
அடுத்த கட்டுரைவைரமுத்து,ஞானபீடம் -கடிதங்கள்