விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12

சிங்கப்பூர் கணேஷ், ஓவியர் ஜீவா, பாரதிமணி
சிங்கப்பூர் கணேஷ், ஓவியர் ஜீவா, பாரதிமணி

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்

அன்புள்ள ஜெ,

 

விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சனிகிழமை காலை 10மணிக்கு வந்து சேர்ந்தேன்.நான் கலந்து கொள்ளும் முதல் இலக்கிய விழா இது தான் அதனால் ஒரு மெல்லிய பதட்டமும் பயமும் இருந்தது.

 

உங்களை தேடி கூட்டத்தில் கண்டுகொண்டேன்.அமர்வு முடிந்ததும் இடைவேளையில்  உங்களை  பார்க்க வாய்ப்பு அமையும் என்று காத்து நின்றேன். விழாவிற்காக நான் என்னை  சிறிது தயார்படுத்தியும் வந்தேன் தூயன், போகன்,நாஞ்சில் நாடான்,முத்துசாமி ,ஜெனிஷ் ,வண்ணதாசன்  ஆகியோரின் சிறுகதைகளை எல்லாம் ஒன்று ,இரண்டு வாசித்து வந்தேன்.எதுவுமே வாசிக்காமல் வந்து இருந்தால் அந்த அமர்வுகள் மூலம் அவர்களின் ஆளுமைகளை புரிந்துகொள்ள சிரமமாக இருந்திருக்கும்,இதை நான் படிக்காமல் வந்த எழுத்தாளர்களின்  அமர்வுகளிள் உணர்ந்தேன்.

 

இடைவேளையில் உங்களை சந்திக்வேண்டும் என்று இருந்தேன்.ஆனால் ஏனோ மனதில் ஒரு மெல்லிய பயம் கலந்த பதட்டம் . ஆனால்  நான் என்னை அறிமுகம் செய்த உடன் என்னை நினைவுகூர்ந்து என்னை கட்டி அனைத்தீர்கள் ஓர் குருவாக,தந்தையாக உங்களை அது காட்டியது. நான் உள்ளம் நெகிழ்ந்த தருணம் அவை என்னால் ஏதும் பேசவே முடியவில்லை .

qq

 

பின் சுனில் கிருஷ்ணன் ,கடலூர் சீனு ,அவர்களை எல்லாம் சந்தித்து பேச வாய்ப்பு அமைந்தது. புது நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்.ஆனால் ஏனோ மூத்த எழுத்தாளர்களிடம் என்னால் அனுக முடியவில்லை ஒரு பயம் கலந்த பதட்டம் ,தயக்கம் இருந்தது . அதை என்னால் கடந்து வர முடியவில்லை . பின் அமர்வுகள் அதில் எழுப்பபட்ட கேள்விகள் அதற்கு அவர்களின்  செறிவான பதில்கள் எல்லாம் இலக்கியத்தை குறித்த ஆழமான புரிதல்களை எனக்கு ஏற்படுத்தியது. கேள்விகள் திசை மாறும் போது எல்லாம் நீங்கள் கடிவாலத்தை பிடித்து நிறுத்தி இலக்கியத்திற்கு கொண்டு வந்தீர்கள்.

 

ஆனால் ஏனோ ஒரு தனிமை உணர்வை அடைய நேர்ந்தது. வல்லபி அக்கா வருவதாக சொன்னார்கள் ஆனால் வர இயலவில்லை. அவர்கள் வந்து இருந்தால் அந்த தனிமை வந்திருக்காது என்று நினைக்கிறேன்.அதனால் 8மணி அமர்வோடு கிளம்பிவிட்டேன்.

 

மீண்டும்  அடுத்த நாள் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் அமர்வு பல விரிவான தலங்களில் இருந்தது.மருந்துவம் குறித்து அவரின் விளக்கங்கள்,சுனில் கிருஷ்ணன் அவர்களின் கேள்விகள் ,மிகவும் சுவரசியமாக சென்று கொண்டு இருந்த போது நீங்கள் தான் மீண்டும் கடிவாலத்தை இழுத்து இலக்கியம் பக்கம் மாற்றி விட்டீர்கள். உங்களின் பகடைகள் ,நகைச்சுவைகள் விழாவிற்கு அழகு சேர்த்தவை.

 

சுரேஷ்பாபு, ராஜகோபாலன் ஜெனிஸ் பரியத் விஜய்சுரியன்
சுரேஷ்பாபு, ராஜகோபாலன் ஜெனிஸ் பரியத் விஜய்சுரியன்- பின்னணியில் காளிப்பிரசாத், ஜெயகாந்தன்

பின் மதிய உணவு  இடைவேளையில் மீண்டும் உங்களை சந்தித்து உங்களிடன் சங்கச் சித்திரங்கள் நூலில் கையெழுத்து வாங்கிக்கொண்டு புகைப்படம் எடுத்தது  எல்லாம்  எனக்கு மறக்க முடியாத நிகழ்வுகள்.பின் நீங்கள் சீனு அண்ணாவிடன் என்னை அறிமுகம் செய்து வைத்தது என்னை நிலை கொள்ளாமல் செய்து விட்டது. அவரிடன் விஷ்ணுபுரம்யில்  Solipsism  , தாஸ்தோவஸ்கி,டால்ஸ்டாய் குறித்து சில கேள்விகள் கேட்டேன் அவரும் விளக்கம் அளித்தார்.அன்பான ஒரு ஆளுமை அவர்.இனிய நினைவுகள்.

 

பல மூத்த எழுத்தாளர்களை சந்தித்கும் வாய்ப்புகள், செறிவான அமர்வுகள் ,உங்கள் கையெழுத்துடன் கூடிய புத்தகம்,புகைப்படம்,பகடைகள்.

இலக்கியம் மட்டுமே ஆன இரண்டு நாட்கள்.என் பதிவுகளில் இந்த  வருடத்தின் மிக முக்கியமான நாட்கள் இவை .

 

இப்படிக்கு,

 

பா.சுகதேவ்.

 

மேட்டூர்.

 

விஜய் சூரியன் சீ.முத்துசாமி
விஜய் சூரியன் சீ.முத்துசாமி

அன்புள்ள ஜெ,

 

விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது என்று ஏராளமானவர்கள் சொல்லியிருப்பார்கள். இத்தகைய விழாக்களைக் குளறுபடிகள் இல்லாமல் அரங்கேற்றுவது சாதாரண விஷயம் அல்ல. எப்படி நடத்தினாலும் யாராவது ரெண்டுபேர் புண்பட்டு சென்று குறைசொல்லி எழுதுவார்கள். அப்படி எவருமே எழுதவில்லை என்பது மகிழ்ச்சி. அதுவே பெரியவெற்றி. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் குழுவினருக்கு பெரிய சல்யூட்.

 

துறைசார்ந்த பல நிகழ்ச்சிகளை நான் அமைத்திருக்கிறேன். எல்லாமே 40 சதவீதம் சொதப்பலாகவே இருக்கும். காரணம் நம்மவர்களால் சேர்ந்துவேலைசெய்ய முடியாது. சொல்லிவைத்தது நடக்காது. எங்கள் அரங்கிலே ஒருமுறை ஹாலை திறக்க வாட்ச்மேன் மறுத்துவிட்டார். அவருக்கு அஃபிஷியலாகச் சொல்லவில்லையாம். முந்நூறுபேர் ரோட்டிலே நின்றோம். அதோடு எங்குபேசவேண்டும், என்ன பேசவேண்டுமென எவருக்கும் தெரியாது. ஆளுமைக்கலை வளர்ச்சி அரங்கிலே சாப்பாடுபற்றி பேசுவார்கள். ஒரு முறை ஒருவர் விவேகம் படம் பற்றி இருபதுநிமிடம் பேசினார். இவ்வளவுக்கும் அவர் செல்ஃப் அஷ்யூரிங் பற்றின அரங்கிலே கேள்விகேட்க எழுந்தவர். அவரிடம் சுருக்கமாகப்பேசச்சொன்னபோது கருத்துச்சுதந்திரமே கிடையாதா என்று கோவித்துக்கொண்டார். அவருடைய நண்பர்களுக்கும் கோபம்.

ar

அரங்குகள் சிறப்பாக இருந்தன. இளம்படைப்பாளிகள் கொஞ்சம் பதறினார்கள். தப்பாகச் சொல்லக்கூடாது என்று நினைத்தே கொஞ்சம் தயங்கி தயங்கிப்பேசினார்கள். போகனின் அரங்கும் வெயிலின் அரங்கும் சிறப்பாக அமைந்தன. அபிலாஷ் அந்த அரங்கைக் கண்டு கொஞ்சம் பின்வாங்கிவிட்டார். அதற்கு ஆரம்பத்திலேயே அவரை கடுமையாக எதிர்க்கமுனைந்த ஓர் இளம்கவிஞரும் கே.என்.செந்திலும் காரணம். அவர்களை நீங்கள் எஸ்.எம்.எஸ் செய்து அபிலாஷை கடுமையாக எதிர்க்கவேண்டாம் என்று சொன்னதாகச் சொன்னார்கள். அது தேவைதான்.

 

தீனதயாளனுடன்
தீனதயாளனுடன்

இந்தமாதிரி அரங்குகளிலே உதிரி உதிரியாக வந்தக் கருத்துக்களை நாமே வீட்டுக்குப்போய் தொகுத்துக்கொள்வதுதான் முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கும். நான் கற்றுக்கொண்டது வெய்யில்போல,  நவீன் போல ஒருவகை ‘தற்கொலைத்தன்மையுடன்’ எழுதினால்மட்டும்தான் கொஞ்சமாவது உருப்படியாக உருவாகிவரும் சூழல் இன்று உள்ளது என்றுதான். ஏகப்பட்டபேர் எழுதுகிறார்கள். சிலருக்கே கவனம் கிடைக்கிறது. இவன் எழுதுவது உண்மை, ஒர்த்தானது என்று நமக்குத்தோன்றவேண்டும். பெருமாள்முருகன் ஏன் முக்கியமானவராகிறார் என்றால் அவர் அந்த எழுத்துக்காக கஷ்டப்பட்டார் என்ற செய்தியால்தான். நீ என்ன கொடுத்தாய் உன் எழுத்துக்கு என்றுதான் கேட்பார்கள். உசிரைக்கொடுத்தேன் என்றால்தான் மதிப்பு

 

முக்கியமான அரங்குகள். எல்லா நிகழ்ச்சிகளுமே மிகச்சரியாக நடைபெற்றன

 

ராஜசேகர். எஸ்.ஆர்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11
அடுத்த கட்டுரைசாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்