பயணத்தகவல்களுக்காக ஒரு தளம்

பேரன்பிற்குரிய ஜெ,

கடந்த  மாதம்  ஒருநாள் வழக்கம் போல  தங்களின் பயணக்கட்டுரைகளை  வாசித்துக்  கொண்டு  இருந்தேன். அப்போது  கூகிள் வரைபட  உதவியுடன்  ஒவ்வொருஇடத்தையையும்   தேடிப் பார்த்துக்  கொண்டிருக்கும் போது,  அந்த இடங்களின்  புகைப்படங்கள்,  தூரம் என   பல தகவல்களையும்தனிப்பட்ட  ஆர்வத்தினால்  சேகரிக்க தொடங்கினேன்.  இந்தஆர்வம்  மேலும் வலுப்பெற்று  தங்களின்  பயண பாதைகளைதொகுக்க   ஒரு  தனி வலைப்பதிவு  தொடங்கும்  அளவிற்கு  வந்துவிட்டது.

http://trips-of-jeyamohan.blogspot.in/

என்ற  தற்காலிக முகவரியில்    மையநிலப் பயணம்,  இந்தியப் பயணம்,  தஞ்சைதரிசனம்,  ஹொய்ச்சாள   கலைவெளியில்,  சஹ்யமலை  மலர்களைத்தேடி போன்ற பயண  கட்டுரைகளில்  வரும் இடங்களை   துல்லியமாக  தொகுத்துவிட்டேன்.  தற்போது அருகர்களின்    பாதை  தொகுப்பில்  கவனம்  செலுத்தி  வருகிறேன்.

ஒரு  ஆர்வத்தில்  இதை  ஆரம்பித்து  செய்தாலும்கூட,   தங்களிடம்  அனுமதி  பெறாமல் செய்வது  மிக  தவறு   என உணர்கிறேன்.   இந்த   தளம்,  காப்புரிமை  விதிகளுக்கு  எதிரானது  என்றால்  தளத்தை  அழித்து  விடுகிறேன்.

ஆகையால்,  தளத்தினை  பார்வையிட்டு  தங்களின்  கருத்தைக்கூறுமாறு  கேட்டுக் கொள்கிறேன்.

தளம்  இன்னும்  வரைவு நிலையில்    உள்ளது.  பிழைகளுக்கு  மன்னிக்கவும்.

– தினேஷ் ராஜு

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14
அடுத்த கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.