இன்று விஷ்ணுபுரம் விருதுவிழா!

muthusamy cover

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

நேற்றுகாலை முதல் கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானிசங் அரங்கில் விஷ்ணுபுரம் விருதுவிழா தொடங்கியது. தொடர்ச்சியாகக் கருத்தரங்குகளும் உரையாடல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. வழக்கம்போல செறிவான உரையாடல்கள், தனிப்பட்ட சந்திப்புகள். இளையவாசகர்கள் ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள்.

 

நேற்று நள்ளிரவு 11 மணிக்குத்தான் நிகழ்ச்சிகள் முடிந்தன. இலக்கிய வினாடிவிடையுடன். இன்று காலை 9 மணி முதல் மீண்டும் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை முதல் அமர்வாக எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனை வாசகர்கள் சந்திக்கலாம். அடுத்து விருது பெறும் சீ.முத்துசாமியுடன் ஓர் உரையாடல். மதியத்திற்குப்பின் ஜெனிஸ் பரியத் அவர்களுடன் ஓர் உரையாடல். 3 மணிக்கு உரையாடல்கள் முடியும்

covercd

மாலை 6 மணிக்கு விருதுவழங்கும் விழா நடைபெறுகிறது. அதே அரங்கில். விழாவில் ம.நவீன் எடுத்த சீ.முத்துசாமி பற்றிய ஆவணப்படமான ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன் சுருக்கபப்ட்ட வடிவம் திரையிடப்படும். சீ.முத்துசாமி குறித்து சீ.முத்துசாமி, மலேசியத்தமிழிலக்கிய முன்னோடி என்னும்  நூல் வெளியிடப்படும். மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத், தமிழ் –ஆங்கில எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள்.

 

இது இன்று கோவையின் அடையாளமாக ஆகிவிட்ட விழா. கோவையின் பெருமக்கள் அனைவரையும் அழைக்கிறோம்

 

ஜெ

சீ.முத்துசாமி என்னும் முன்னோடி

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2