காஞ்சி உரைநிகழ்வு

kanchi

 அன்பு ஜெ,

 

தமிழ் பாராம்பரிய அறக்கட்டளை 2011ல் முதல்முறையாக பேச்சுக்கச்சேரி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் நிகழ்வாக ‘குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்னும் தலைப்பில் சங்க இலக்கியங்கள் குறித்த தங்களது சிறப்புரை இடம்பெற்றது. ஆறாம் ஆண்டின் பேச்சுக்கச்சேரியில், இம்முறை ‘காஞ்சி மஹாமணி’ என்னும் தலைப்பில் காஞ்சிபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரியாக, வரும் டிசம்பர் 16 & 17 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

 

இந்நிகழ்வில், காஞ்சியின் பெருமை, பரமேஸ்வர விண்ணகரம், திருப்பருத்தி குன்றம், தமிழ் இலக்கியத்தில் காஞ்சி, சைவ காஞ்சி, வைணவ காஞ்சி, மற்றும் அதி அற்புத கைலாசநாதர் கோயில் குறித்து பல்வேறு ஆய்வாளர்களின் உரைகள் இடம் பெறுகின்றன.

 

விஷ்ணுபுரம் விருது விழாவுக்காக கோவையில் நீங்கள் கூடியிருக்கும் நன்நாளில், நடைபெறும் நிகழ்வு இது என்பதை நன்கறிவோம். விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொள்ள இயலாத சென்னை வாழ் வாசகர்களுக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறோம். :-)

 

மேலதிக தகவல்களுக்கு:

 

https://thtpechchukkachcheri.wordpress.com/

 

 

அன்புடன்,

முத்து.

 

முந்தைய கட்டுரைஅஞ்சலி பெரியபாண்டியன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது உரைகள் 2017