விஷ்ணுபுரம் விருது : முகங்கள்  

DSC_4932

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். 16 ஆம்தேதி காலை 9 மணிக்கு முதல் அமர்வு ராஜஸ்தானி சங் அரங்கத்தில் தொடங்கும். நண்பர்கள் முன்னரே வந்துவிடும்படி கோருகிறேன்.

 இம்முறை முதல்நாள் முதலே அரங்கை முறைப்படுத்தியிருக்கிறோம். தமிழில் தடம்பதித்த படைப்பாளிகள், இவ்வாண்டு கவனத்தை ஈர்த்த புதியபடைப்பாளிகள், மலேசியப்படைப்பாளிகள், விழாவின் சிறப்பு விருந்தினர் என வருகையாளர்கள் நான்கு தரப்பினர்.

வெயில்
வெயில்
writer-abilash-2
ஆர்.அபிலாஷ்

 

போகன்
போகன்

முதல்வகை படைப்பாளிகளில் போகன், ஆர்.அபிலாஷ்,வெயில் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். போகன் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். சென்ற சில ஆண்டுகளாக தமிழில் மிகவும் கவனிக்கப்படுகிறார். கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகப்புத்தகம் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. ஆர்.அபிலாஷ் உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிவரும் கட்டுரைகள் மூலம் பெரிதும் விவாதிக்கப்படுபவர். அவருடைய கால்கள், கதைமுடிவுக்கு வந்துவிட்டீர்கள் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.

sures
சுரேஷ் பிரதீப்

 

விஷால்ராஜா
விஷால்ராஜா
தூயன்
தூயன்

 

கே ஜே அசோக்குமார்
கே ஜே அசோக்குமார்

இரண்டாம் வகைப் படைப்பாளிகளில் தூயன், சுரேஷ் பிரதீப், கே.ஜே.அசோக் குமார், விஷால்ராஜா என நான்குபேர் கலந்துகொள்கிறார்கள்.இவர்களைப்பற்றிய விரிவான அறிமுகங்களும், விமர்சனக்கட்டுரைகளும் இந்தத்தளத்தில் முன்னரே வெளியாகியிருக்கின்றன  இவர்களின் அரங்குகள் 16 ஆம் தேதி நிகழும்.

 

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
நவீன்
நவீன்

 

ஷண்முக சிவா
ஷண்முக சிவா

மலேசியப்படைப்பாளிகளில் ம.நவீன்,டாக்டர் ஷண்முக சிவா ஆகியோர் கலந்து கொள்ளும் அமர்வு நிகழும். மலேசிய இலக்கியங்கள் பற்றிய உரையாடல் இது. ம.நவீன் மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த காதல். பறை,வல்லினம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர். இலக்கியவிமர்சகர், சிறுகதை எழுத்தாளர். மலேசிய இலக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளின் மையமான கூலிம் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரம்மானனந்த சரஸ்வதி அவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

 

பி.ஏ.கிருஷ்ணன்
பி.ஏ.கிருஷ்ணன்
ஜனிஸ் பரியத்
ஜனிஸ் பரியத்

 

விழா அழைப்பாளர்களில் பி.ஏ.கிருஷ்ணன், ஜெனிஸ் பரியத், சீ.முத்துசாமி ஆகியோரின் அரங்குகள் இரண்டாம்நாள் நிகழும். பி.ஏ.கிருஷ்ணன் தமிழில் பெரிதும் வாசிக்கப்படும் படைப்பாளி. ஆங்கிலத்திலும் எழுதிவருபவர். புலிநகக்கொன்றை, கலங்கியநதி ஆகியவை இவருடைய நாவல்கள்.

தமிழின் முதன்மையான படைப்பாளிகளாகிய நாஞ்சில்நாடன், தேவதேவன், பாவண்ணன், க.மோகனரங்கன்,சு,வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன், இசை, கே.என்.செந்தில், பாரதி மணி, சுப்ரபாரதிமணியன் கீரனூர் ஜாகீர்ராஜா காலப்பிரதீப் சுப்ரமணியம் என பலர் கலந்துகொள்கிறார்கள். சென்றமுறை விருதுபெற்ற வண்ணதாசன் கலந்துகொள்கிறார்

வண்ணதாசன்
வண்ணதாசன்

.

சு.வேணுகோபால் (1
சு.வேணுகோபால் (1
பாவண்ணன்
பாவண்ணன்

 

காலப்பிரதீப் சுப்ரமணியம்
காலப்பிரதீப் சுப்ரமணியம்
தேவதேவன்
தேவதேவன்
 நாஞ்சில்நாடன்
நாஞ்சில்நாடன்

 

லக்‌ஷ்மி மணிவண்ணன்
லக்‌ஷ்மி மணிவண்ணன்

 

கீரனூர் ஜாகீர்ராஜா
கீரனூர் ஜாகீர்ராஜா

 

க மோகனரங்கன்
க மோகனரங்கன்

emko

isai
இசை

 

 

கே.என்.செந்தில்
கே.என்.செந்தில்

 

 பாரதிமணி
பாரதிமணி
சுப்ரபாரதி மணியன்
சுப்ரபாரதி மணியன்

விஷ்ணுபுரம் விழாவைப்பொறுத்தவரை மேடையிலிருப்பவர், அரங்கில் இருப்பவர் என்னும் வேறுபாடு எப்போதுமில்லை. அரங்கில் தமிழின் பெருமைமிக்க படைப்பாளிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். சென்றமுறை விருது பெற்றவர்கள் இப்போது அரங்கிலிருக்க சென்றமுறை வாசகர்களாக வந்து அரங்கிலிருந்த தூயன், சுரேஷ்பிரதீப் போன்றவர்கள் இன்று மேடையில் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இலக்கியத்தின் இயல்பான வழிமுறை இதுவே

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

 

இடம் ராஜஸ்தானி சங் அரங்கம்

No 579, D B Road,R S puram, – 641002

தொடர்புக்கு  9894033123, 9965846999, 7339055954

=======================================================================

ஒரு கவிதை

ஏன் அது பறவை?

தூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா

கே ஜே அசோக்குமார் படைப்புகள்

கே.ஜே.அசோக்குமாரின் கதையுலகம்-பாவண்ணன்

எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்

தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு

ஒளிர்நிழல் -அகில்குமார்

தூயனின் ’இருமுனை’ -நாகப்பிரகாஷ்

தூயன் சிறுகதைகள்

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்-நரோபா

போகனின் இருகதைகள் -நந்தகுமார்

விஷால் ராஜா பேட்டி

சுரேஷ் பிரதீப் பேட்டி

சீ முத்துசாமியின் மண்புழுக்கள்

விஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…

======================================================================

சீ.முத்துசாமி என்னும் முன்னோடி

சீ முத்துசாமியின்’மண்புழுக்கள்’- பச்சைபாலன்

எரிகல் ஏரியின் முதல் உயிர்

இருளில் அலைதல் -கணேஷ்

சீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு

 

======================================================================

ம.நவீன் | சிறுகதைகள்

நவீன் குறித்து ஜெயமோகன்

சிற்றிதழ் என்பது… ஜெயமோகந் நவீன் உரையாடல்

தூயன் நூல்வெளியீட்டு விழா காணொளி

தூயன் சிறுகதைகள்

தூயனின் இருமுனை ஒரு குறிப்பு

விஷால் ராஜா | பதாகை

அந்தரச் செடி – சிறுகதை விஷால் ராஜா

சுரேஷ் எழுதுகிறான் சுரேஷ் பிரதீப் இணையதளம்

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்

பட்சியின் வானம் கே ஜே அசோக்குமார் இணையதளம்

எழுத்துப் பிழை போகன் சங்கர் இணையதளம்

மின்னற் பொழுதே தூரம்: போகன் சங்கர்

போகன் சங்கர் கவிதைகள் – வல்லினம்

போகன் சங்கர் | சிறுகதைகள்

சொல்வனம் போகன்

மின்னற் பொழுதே தூரம் அபிலாஷ் இணையதளம்

வெய்யில் உரை காணொளி

முந்தைய கட்டுரைரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி
அடுத்த கட்டுரைஎழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு