ஈழ இலக்கியம் -கடிதங்கள்

rasa
வஅராசரத்தினம்

 

 

சேய்மையிலிருந்து ஒரு மதிப்பீடு  

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு.

 

ஈழ இலக்கியம் விமர்சன நூல் பற்றிய பதிவை பார்த்தேன். வெகு மகிழ்ச்சி. இங்கேயே வாழ்ந்தாலும் இங்குள்ள இலக்கியம் பற்றி அறிவதில் ஓர் கடினத்தன்மை நிலவுகிறது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை எழுத்தாளர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்து விட்டமை காரணமாக இருக்கலாம் அல்லது கொழும்பில் எழுத்தாளர்கள் குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் உங்கள் நூல் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

 

அன்புடன்

அனு

 

அன்புள்ள ஜெ

 

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை நூலை முன்பு ஒரு முறை நூலகத்தில் வாசித்திருக்கிறேன். அழகியல்நோக்கில் ஈழ எழுத்துக்களை மதிப்பிட்டு நீங்கள் முக்கியமானவர்களாகக் கருதும் படைப்பாளிகளைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். பெரும்பாலான கட்டுரைகள் கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையில் வெளியானவை என நினைக்கிறேன். அவர்கள் உங்களிடம் கோரி எழுதவைப்பதனூடாக தமிழகத்திலிருந்து எமது இலக்கியம்குறித்த ஒரு காத்திரமான பார்வையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே முதன்மையான நன்றி அவர்களுக்குத்தான் சொல்லப்படவேண்டும்.

 

தொகுதியில் இல்லாதவையும் சில ஈழக்கட்டுரைகள் உள்ளன. சு வில்வரெத்தினம் பற்றிய கட்டுரை. அதேபோல  வ.அ.இராசரெத்தினம் போன்ற சிலரைப்பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தீர்கள். அவர்களையும் எழுதினால் ஈழ இலக்கிய முன்னோடிகளைப்பற்றிய முழுமையான நூலாக அமையும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

 

சிவபாலன்

 

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி

ஈழ இலக்கியம்:ஒரு கடிதம்

இரு ஈழக்கடிதங்கள்

ஓர் ஈழ எழுத்தாளருக்கு…

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79
அடுத்த கட்டுரையானை டாக்டர் -கடிதம்