தமிழில் மின்னூல்புரட்சி ஒன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூல்களை வைத்துக்கொள்வது, கொண்டுசெல்வது போன்றவை சிரமமாக ஆகிவிட்டிருக்கும் காலம். மின்னூல்கள் அவர்களுக்குரியவை. விலையும் குறைவு.
விக்ரமாதித்யனின் நான்கு கவிதை நூல்களை விமலாதித்த மாமல்லன் முயற்சியால் வாசகர்கள் தட்டச்சு செய்து அமேசான் இணையதளத்தில் ஏற்றியிருக்கிறார்கள். வாசகர்கள் வாங்கி ஆதரிக்கவேண்டும்
இம்முயற்சி தொடர்ந்தால் அமேசானே ஒரு சிறந்த புத்தக ஆவணக்காப்பகமாகவும் ஆகக்கூடும். சிறந்த நூல்கள் அனைத்தையும் அங்கே வைத்திருக்கலாம். தேவையானபோது வாங்கி வாசிக்கலாம்
ஜெ