“பனைமரச் சாலை – புத்தகம் முன்பதிவு திட்டம்

Rev. Godson

அன்புள்ள அண்ணன்,

பனைமரச்சாலை புத்தகமாக வெளிவராது தடைபட்டுக்கொண்டே போனது, என்ன செய்யலாம் என்று ஆ. கா. பெருமாள் அவர்களை கேட்டேன், நல்ல ஒரு ஆசிரியரை வைத்து இதனை “எடிட்” செய்ய வேண்டும் என்றார்கள். பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்களின் உதவியினை நாடினேன், அவர்கள் எனக்காக தனது பிற பணிகளுக்கிடையிலும் புத்தகத்தை சீராக்கிக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் முன்னமே கூறியபடி முன்னுரைக்காக வந்து நிற்கும் தருணம் இது. முன்னமே சொல்லாத ஒரு ஒன்று “முன்பதிவு” செய்வதில் உதவி. எனது கையெழுத்துக்கு மதிப்பேதும் இல்லை, ஆனால் பனை ஓலையில் நான் செய்பவை அனைத்தும் விலைமதிப்பற்றவை, ஆகவே அவற்றையே முன்பதிவு செய்வோருக்கு வழங்கலாம் என முடிவு செய்தேன்.  உங்கள் வாசகர்களும் இப்பயணத்தில் என்னோடு பெருமளவில் சேர்ந்துகொண்டனர். ஆகவே அவர்களுக்கும் முன்பதிவு குறித்து தெரிவிப்பது அவசியம் என கருதுகிறேன்.

உளம் நிறைந்த நன்றிகளுடன்

அருட்பணி. காட்சன் சாமுவேல்

“பனைமரச் சாலை – புத்தகம் முன்பதிவு திட்டம்”

கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி மும்பை ரசாயனியிலிருந்து எனது இரு சக்கர வாகனத்தில் பனைமரங்களையும் அது சார்ந்த கலாச்சாரங்களையும் தேடிய எனது நெடிய பயணம் கர்நாடகா, ஆந்திரா தமிழ்நாடு புதுவை வழி நாகர்கோவிலை ஜூன் 2ஆம் தேதி வந்தடைந்தது. இப்பயணத்தைத் 90 அத்தியாயங்களாக எனது வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். சுமார் 700 பக்கம் வரும் இப்பயணக்கட்டுரையை புத்தகமாக்க நண்பர்களின் உதவியை கோருகிறேன். 200 வாசகர்கள் ஒரு புத்தகத்தினை ரூ500 கொடுத்து முன்பதிவு செய்தால் புத்தகம் வெளியிடுவது சாத்தியமாகும் நிலையில், பனை மரம் குறித்த எனது 20 ஆண்டு நேரடி அனுபவங்களும் தேடலும் இணைந்த இந்த புத்தகம் பனை ஆர்வலர்களுக்கு பனை குறித்த புரிதல் பெற பேருதவியாக இருக்கும். விருப்பமுள்ளவர்கள் உங்கள் எண்களை எனக்கு அனுப்பவும். எத்தனை புத்தகங்கள் தேவை என்பதையும் குறிப்பிடவும்.

முன்பதிவு செய்வோருக்கான சிறப்பு வாய்ப்புகள்

1. ரூ750/- விலை பெறும் இப்புத்தகம் மூன்றில் ஒரு பங்கு விலை குறைத்து கொடுக்கப்படுகிறது.
2. புத்தகம் வாங்கும் ஒவ்வொரு வாசகர்களும் பனை ஓலையில் செய்த ஒரு “Book Mark” இலவசம்
(நிழல் உருவமாக உங்கள் புகைப்படத்தை அனுப்பினால் அதையே ஓலையில் “புக் மார்காக” வரைந்தும் தரப்படும்)
3. 10 புத்தகங்கள் சேர்த்து முன்பதிவு செய்வோருக்கு பனை ஓலையில் செய்த A4 அளவிலான ஓவியம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
4. 25 புத்தகங்கள் சேர்த்து முன்பதிவு செய்வோருக்கு அவரது புகைப்படம் அனுப்பினால் பனை ஓலையில் செய்த A4 அளவிலான ஓவியம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்

புத்தக வெளியீடு குறித்து மேலும்….

1. ஜனவரி மாதம் புத்தகம் வெளியிடப்படும்
முன்பதிவு செய்வோர் 2017 டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் என்னை தொடர்புகொள்ளவும்
2. 200 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்படும் சூழலில், வருகிற டிசம்பர் 2017 முதல் வாரத்தில் பணம் அனுப்பவேண்டிய வங்கி எண் கொடுக்கப்படும்.
3. 200 புத்தகங்கள் முன் பதிவு செய்யப்பட்டாலே புத்தகம் வெளியிடப்படும்

[email protected]

9080250653

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்தன் அமேஸானில்
அடுத்த கட்டுரைஎடிசன் நூலகம்