வீரான் குட்டி -கடிதங்கள்

vee

 

ஜனனி

———–

ஓர் அழகிய சிற்பத்தை

மீண்டும்

செதுக்கி

வெட்டவெளியில்

ஒரு சிற்பத்தை

நிறுவிக் கொண்டிருக்கிறேன்

உன்னைத் தீண்டும் போதெல்லாம்

 

நுண் வடிவ சிற்பங்கள்

உருக் கொள்கின்றன

ஒவ்வொரு கணமும்

 

 

 

பிரபு மயிலாடுதுறை

 

 

அன்புள்ள ஜெ,

 

வணக்கம். வீரான் குட்டியின் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக, பார்க்காதது போல…, தழுவுதல், படிப்பு முதலியன.

 

இதேபோல் இசைத்தன்மையைப் புறக்கணித்து மலையாளத்தில் எழுதும் வேறு கவிகள் உளரென்றால் தெரிவிக்கவும்.

 

நன்றி,

 

விஜயகுமார்.

 

 

ஜெ

 

வீரான் குட்டி கவிதைகள் எளிமையாக அழகாக இருந்தன. குறுந்தொகைப்பாடல்களைப்போல.

இக்கவிதைகளில் நான் விரும்பிய அம்சம் இவற்றிலுள்ள நம்பிக்கையும் இனிமையும். வழக்கமான கசப்பும் துவர்ப்பும் இல்லாத கவிதைகள்

நீங்களே எனக்கு அறிமுகம் செய்த முகுந்த் நாகராஜன், இசை, வெய்யில் போன்றவர்களின் உலகைச்சேர்ந்த கவிதைகள் இவை

 

ஜெயராமன்

 

வீரான் குட்டி கவிதைகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77
அடுத்த கட்டுரைசமணர் கழுவேற்றம் ஒரு கட்டுரை