புரட்டாசி பட்டம்

5

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தினர்களுக்கும் நலம் விளைய பிராத்தனைகள்.

மாதங்கள் உருண்டோடிவிட்டது சிறுக சிறுக மேன்படுத்தி, மனதளவில் மேலும் பக்குவப்பட்டு புரட்டாசி பட்டத்திற்கு உளுந்து, கொள்ளு மற்றும் நெல் மானாவாரியில் பயிரிட்டுள்ளோம். 2017 ஆயுத பூஜையில் கைப்பெட்டிக்கு அருகில் களைக்கொத்தி வைத்து ஆசிர்வாதம் பெற்றோம் :)

தொடர் திருட்டு, கேபிள் இரண்டு முறை, தகடுகளிலிருந்த சிறு கேபிள் ஒரு முறை பின் செயலி பேட்டியே சேதமாக்கப்பட்டு திருட என்ன இருக்கிறது என்று பார்த்திருப்பது ஒரு முறை. அன்று காலை நானும் தந்தையும் தோட்டத்திற்கு போய் இறங்கியதுமே தெரிந்தது கண்ணில் படும் ஏதொவொன்று இன்றில்லையே என்று அது செயலி தான் என்று தெரிந்ததும் தந்தை மிகுந்த பதட்டத்திலிருந்தார் நானும் தான் என்றாலும் பதட்டப்படாமல் என்ன செய்யவேண்டும் என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு அங்குமிங்கும் துழாவி செயலிப்பேட்டி ஒரு புதரிலிருந்ததை பார்த்தேன். சேதப்படுத்தி உள்ளே என்ன கிடைக்குமேன்று பதம் பார்த்துள்ளனர். என்ன செய்வதென்றே தெரியாமல் சில மணி நேரம் கடந்தது தந்தையை பதட்டப்படாமலிருக்க சொல்லிவிட்டு நான் சற்று விலகி நின்று சில நண்பர்களிடம் பேசி (புலம்பி என்று சொல்லவேண்டும் ;)) மனதிலிருந்த பதட்டத்தை தனித்தேன். மானிய உதவிகள் செய்த நண்பரின் ஆலோசனைப்படி காவல்துறை புகார் செய்து பின் அவர்களை தோட்டத்திற்கு அழைத்து வந்து பார்வையிட செய்தோம் அவர்களுக்கு உண்டான கவனிப்புகளுடன். அவர்களிடம், அங்கே அந்த பேட்டி போட்டப்படியே இருக்கு நீங்க கைரேகை பார்க்கவல்ல நிபுணத்துவத்துடன் வந்தால் உதவியாகயிருக்கும் என்றேன் அவர்கள் சற்றே புன்னகையுடன் அதற்கேல்லாம் மாவட்ட தலைமையகம் வரை போய் வரனும் என்றனர். காவல் நிலையத்தில் முதல் முறை அனுபவம், கட்டப்பஞ்சாயத்து நடந்துக்கொண்டிருந்தது ‘அருகேயிருக்கும் கிராமத்தில் சொத்து பிரிவினைக்கு பின் தொடரும் குடும்ப தகராறு..’, ‘ஒரே கிராமத்தின் இரு குழுக்களிடையே அதிகார தகராறு வன்முறை..’ நேரே பார்க்க கேட்க புது அனுபவமாகயிருந்தது இன்னுமா இந்த தகராறு என்று, அத்தோடு சற்று தனித்தபின் அந்த தகராறுகள் மத்தியில் என் ஒயர கானும் என்று சொல்லியதை நினைத்து சற்று சிரித்தேன். அடுத்த வாரத்திலே தந்தை அழைத்து அனைத்து உபகரணங்களையும் கலட்டி விட்டுக்கொண்டாந்தாச்சு என்றார், சரி என்பதை கடந்து எதுவும் பேச முடியவில்லை.

நிலையில்லாமை பற்றிக்கொண்டிருந்தது அதனுடனே தண்டபானி அண்ணணை அழைத்தேன் விசயத்தை சொல்லி தொடர்புக்கொள்ள தாமதமாகிவிட்டது என்றேன். அவர்கள் ‘சில்லரை திருட்டாகயிருந்தால் அது வேறு, அருகே கிராமத்தினறால் என்றால் அது வேறு எல்லாமே நீங்க படிக்கிற கிராமமாயிருக்காது, அங்கேயும் பொறாமை, வஞ்சம் என்று எல்லாம் இருக்கும். வேலை பார்க்குறாங்க கூலி வாங்குறாங்க ஆனால் இதேல்லாம் அன்றே மறக்கப்படலாம். உணர்ச்சிவசப்படாமல் அறிவால் சிந்தித்து செயல்படுங்கள்’ என்றார். இந்த நினைப்பும், சில்லரை திருட்டாகயிருந்தாலும் இது போல சூறையாடப்படுவோம் என்ற நினைப்பும் இல்லாமல் இருந்த எனக்கு இதை ஏற்றுக்கொண்டதும் விடுதலையானது. சொந்த ஊர் நினைப்பில் அபிரிமிதமான நம்பிக்கையில் இருந்து நிதர்சனத்திற்கு திரும்பி வர, பட்ட அனுபவம் இது. அடுத்ததாக ஒரு புரிதல், ஊருக்கும் கிராமத்திற்கும் இடைவேளி சிறிது உண்டேன்று மற்றொரு பெரிய புரிதல் 10 கீ.மீ தூரம் தொலைவு தான் என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு அப்படியேன்றால் இந்த புன்னிய பாரதம் தான் எத்தனை கிளைகளையுடை மரம்? ஆதாலால் தான் பிரபஞ்சத்தை இத்தனை அனுக்கமாக உணர்ந்துள்ளனரோ இங்கே இருந்த ஞானிகள்.

சிறிது இடைவேளிக்கு பின், பியிர் செய்வதென்று முடிவெடுத்து செயல்பட்டோம். பருவத்தின் முதல் மழைக்கு பின் முதல் உழவு முடிந்து மண் பக்குவமானது. முதல் முறை நெல் என்பதால் பாத்தி சரிசமமாகயிருக்க வேண்டியது அவசியம் வரப்பிற்குள் நீர் ஒரேயளவில் நிற்க, அருகில் உள்ள தோட்டத்திலிருந்து அறிவுரைகளும் பெற்றோம், கடினமான இடங்களை சரிசெய்து பின் மீண்டும் உழவு முடிந்து மண் தயாரானது. இந்த நேரத்தில் புது கருவிக்கு பழகினொம், எறியல். உளுந்து நெல் இரண்டும் கிராம வேளான் அலுவலர் வழியாகவே கிடைத்தது, பையூர் கொள்ளு பொன்னமராவதியிலிருந்து பெற்றோம். சில அரசு மானிய புரிதல் இங்கே, கொள்ளு புதுக்கோட்டையில் கிடைக்கும் என்று அங்கே தொடர்புக்கொண்டதில், நேரடியாக விநியோகத்தில் மானிய சிக்கல் உண்டு கிராம வேளான் அலுவலர் மூலம் பெற்றால் சுலபம். எங்கள் கிராம வேளான் அலுவலர் அவர் வேலையை இன்னும் சுலபமாக்கிக்கொண்டார், பொன்னமராவதியில் இருக்கிறது என்று வழிகாட்டினார். அனைத்தையும் கையில் பெற்றுக்கொண்டு, வானம் பார்த்து மழைக்காக காத்திருந்தோம் அதிகமா நம்மவூர் பிள்ளைகள் ‘ரேயின் ரேயின் கோ அவே..’ என்று பாடிவிட்டிருக்கிறார்கள் வருவனா என்கிறது ;). இதற்கு பிறகு தான் குட்டி விளையாட்டு, அந்த பட்டத்தில் குறிப்பிட்ட மழை வந்ததும் ஊரே ஒரே சொடுக்கில் தயார் என்ற நிலைக்கு வந்துவிடுகிறது, மழைக்கு பின்னான முதல் அல்ல இரண்டாவது நாள் தான் உழவுக்கு தகுந்தது, அனைத்தையும் கேட்டுக்கொண்டு சரி இன்று டிராக்டரை அழைத்தால் ஒரு வண்டியும் இல்லை அனைத்தும் பணியில்! நமக்கு வேலை இன்னும் கூடுதல், வண்டி வேண்டும், அறிவுகரைகளுக்கு அலுவலர் மற்றும் வேலைக்கு ஆட்கள். அனைத்தும் ஒருங்கீனைத்து தயார் என்னும் பொழுது மண் பதம் குறைந்துவிட்டது ஆனது ஆகட்டும் என்று உழது விதைத்துவிட்டோம்!

விதை நேர்த்தி செய்ய பிரியத்தனப்பட்டது இன்னொரு விளையாட்டு. அதாவது உளுந்துக்கு 2 மணி நேரம் கொள்ளுக்கு 4-8 மணி நேரம் கொடுக்கப்பட்ட சத்து உரங்களுடன் கலந்து வைக்கவேண்டும் பின் நிழல்காய்ச்சல். இது அனைத்தையும் குறித்துக்கொண்டு அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு இதை எப்போது பன்னவேண்டும் என்று கேட்க, விதைக்கும் முன்பாக என்றார், விதைக்கும் அன்று அல்ல முதல் நாள். விதைப்பது என்று என்றே தெரியாமல் அல்லவா இருந்தோம் அதுவும் மழை உத்தரவு தரவேண்டும் தொடர்ந்து ஆட்கள் கிடைப்பது என்பதை பொறுத்தல்லவா விதைத்தோம். பிறகு என்ன, மிண்டும் அண்ணண் அவர்களுக்கு அடித்து நிலைமை சொல்ல அவர் உடனடி விதை நேர்த்தி முறைகளை சொல்ல அதன் படி செய்து முடித்து பட்டத்தோடு விதைப்பை நிறைவு செய்தோம். அண்ணணிடம் இரண்டு முறை படங்கள் எடுத்து அனுப்பி அறிவுரை பெற்றேன் இயற்கை ஆர்வம் என்பதால் பயிர்களுக்கு எரு மற்றும் பஞ்சகாவியம் தரும்படி சொன்னார். பஞ்சகாவியம் தயாராகிக்கொண்டிருக்கிறது, கண்டிப்பாக இதுக்கான தனி மடல் எழுத வேண்டும். இது பாலபாடத்திலும் சேர்ந்தது.

உழவுக்கு முன் இருந்து மழை கூட பின் இல்லை மேல் மண்ணில் ஈரம் இருக்கும் அளவுக்கே இரண்டு முறை தூரல். இயற்கையின் மேல் இருக்கும் நம்பிக்கை பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டுது என்று தான் சொல்லவேண்டும். தந்தை அவ்வப்போது அழைத்து தம்பி ஜன்சேட் போட் தண்ணீர் விடுவோமா என்பார், மானாவாரி பயிர் தான் இந்த முறை மழையை மட்டுமே நம்பி போகட்டும் ஆள் வைத்த பின் தண்ணீர் பாச்சுவதை பார்ப்போம் என்று கூறினேன். நான் தந்தையிடம் இதை பற்றியேல்லாம் பேசி கொண்டிருப்பதை அத்தொழில் ஊரியவர்கள் கேட்டால் நிச்சயம் ஒரு குழந்தைகள் பேசியதை பார்க்கும் அனுபவமாகத்தான் இருக்கும் அவர்கள் என்னை குழந்தையாக ஏற்றுக்கொண்டால் ;).

திருக்குறளில் ‘உழவு’ என்ற அதிகாரம் தனியாக இருக்கவேண்டிய அவசியம் உணவு மட்டுமே இல்லை அதற்கான வழிமுறைகளின் அவசியமும் மிகமுக்கியம் என்று தொன்றுகிறது. ‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து;

இல்லாளின் ஊடி விடும்.’ இன்று இருப்பதைவிட பயிர்கள் இன்னும் செலிப்பாக இருந்திருக்கலாம் தினம் தினம் பார்த்து கவனித்திருந்தால், அதற்கு வேண்டியவைகளை செய்யமுடிந்தால், விரைவிலேயே இதுவும் சிறப்பாக முடியவேண்டும் முயற்சிகளில் இருக்கிறோம் முன்னோர்கள் அருளவேண்டும் இனிதே நிறைவேற. அதனால் இது, இதனால் அது என்று சுழற்சியில் தாமதமாகிறது, முடிய வேண்டும் பார்ப்போம். இந்த மடலில் இதுவே பாலபாடம்.

இந்த பொங்கலுக்கு தானியங்கள் வீட்டிற்கு வருமா என்பதை உறுதிபட சொல்லயிலாது, வந்தாலும் வாராட்டாலும், அகத்தில் நித்தம் நினைக்கிறோம் மகிழ்ச்சியாகயிருக்கிறது.

கொள்ளுக்கு 8 மணிநேரம் என்றால் உளுந்துக்கு எத்தனை மணி நேரம்? பையொட வைக்கனுமா இல்லை கொட்டி வைக்கனுமா? மூலிகை பூச்சி விரட்டி..?? என்று பேராசிரியரிடம் அரிச்சுவடி பாடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பையூர் தண்டபானி அண்ணண் அவர்களுக்கு நன்றிகள்.

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் அனைவரையும் சந்திக்க ஆவலோடு நிறைவு செய்கிறேன்.

பாலபாடம் சிறு குறிப்புகளா ஒழுங்குபடுத்தலாம் என்று தொன்றுகிறது;

– வேளான் நிலம் கண்ணில் பட வேண்டும், தினம் தினம் பார்வையிடும்படி. நாம் அங்கு இருக்கவேண்டும் அல்ல ஒரு வேளான் குடி இருக்க வேண்டும், குறைந்தது காவல் குடி. இல்லையேன்றால் எத்தனை காலம் வேண்டுமானாலும் பொறுமையாக இருங்கள் தயாரானதும் செயல்படுங்கள்.

– புதிதாக வேளான் நிலம்/தோட்டம் வாங்குவதாயிருந்தால் பல விசயங்கிளில், முக்கியமாக – மின்சார வசதி இருந்தால் சால சிறப்பு!

– புதிய விவசாய மானிய மின் இணைப்பு என்றால்(எந்த சலுகைகலும் இல்லாத வகையில்) – இணைப்பு கேட்ட பின், அதன் அடிப்படையில் விவசாய விலை (ரூ.4) இணைப்பு கோர வேண்டும் உடனடி இணைப்பிற்கு. அதன் வேகத்தில் தான் நடக்கும் முக்கியமாக அருகில் 100 ஆடியில் மின் கம்பம் இருந்தால் தான் அதுவும் நடக்கும்.

– எந்த ஒரு வேலையும் கேட்பது போல படிப்பது போல அது ஒன்றாக மட்டும் இருப்பதில்லை, அதனினுள் பல படிகளாக வேலைகள் இருக்கும், நெருங்கையில் தான் தெரியும், ஆக தயாராகயிருக்கவேண்டும்.

– சிறு விவசாயி – அங்கே சில ‘க்’குள் பாசனவசதியற்ற புஞ்சை (பாசன வசதியிருந்தால் 2.5 ஏக்கர்), தனி நபருக்கு 5 ஏக்கர் குறைவாக இருத்தல் வேண்டும், குடும்பத்தில் வெறு யாருக்கும் நிலம் இருக்ககூடாது.

நன்றி!

நாராயணன் மெய்யப்பன்

***

ஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்
என்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!
கன்றுகள் காடாகவேண்டும்!
கடைநிலை பொருளாதாரம் – அறுந்த நூல்கள்
அறம்செய விரும்பு -தகவல்கள்
அப்பா, இயற்கைவேளாண்மை -கடிதங்கள்
இயற்கைவேளாண்மை -கடிதம்
முந்தைய கட்டுரைமெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு
அடுத்த கட்டுரைரமேஷ் பிரேதன் அமேசானில்