வணக்கம் ஐயா..
தங்களின் மைய நில பயண கட்டுரையில் வட இந்திய மாநிலங்களின் பின் தங்கிய கல்வி நிலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்
தங்கள் கவனத்திற்கு…..
கீழே உள்ள இணைப்பு, இந்தியா முழுவதுமான மாநிலங்களில் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை பற்றி குறிப்பிடுகிறது.
அன்புடன்
நாஞ்சில் சுரேஷ்.
ஜெ அவர்களுக்கு
வணக்கம்..
மையநிலப் பயணம் தினசரி படிக்கிறேன். உங்கள் வாசகராய் இருப்பது எத்தனை சிறந்த அனுபவம்!!
வாழ்நாளில் நாங்களெல்லாம் போகவே முடியாத, அற்புதமான இடங்களையும், வரலாற்று சின்னங்களையும் என் கணினித்திரையில் காணவைக்கிறீர்கள்..
எத்தனை கோடி நன்றி சொல்வது!!
பயணங்கள் எதற்கு செல்ல வேண்டும் என்பதை உங்கள் வார்த்தைகளில் மிக அழகாகக் கூறினீர்கள்.
“உலகம் என்பது நம் இல்லத்திற்கு வெளியே இருப்பது, நாம் அறியாதது. அதை அறிவதே பயணம் என்பது.
“
சத்தியமான வார்த்தைகள்.. பல மைல் தூரம் கடக்க வேண்டும் என்பது இல்லை.. மிகச்சில கிமீ பயணம் கூட நம் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக அமையும்..
எத்தனை அழகு அச்சிற்பங்களில்.
“”காலையொளியில் தீர்த்தங்காரர்களைப் பார்ப்பது விழியையும் மனதையும் நிறைக்கும் அனுபவம். அணியற்ற மானுட உடல். மானுட உடலே ஓர் அணி என்பதுபோல ஆண்மையின் முழுமை கூடிய தோற்றம். வெளியை நோக்கி கனிந்த ஊழ்கநிலையில் நின்றிருந்தனர். இங்குள்ள அனைத்தையும் துறந்தவர்கள் கீழே நோக்க என்ன உள்ளது?””
உண்மை தான் ஜெயமோகன்…
என்னால் அதை மனதுக்குள் காண முடிகிறது..
நன்றி நன்றி .. அருமையான அனுபவத்தைப் பகிர்வதற்கு… ஒரு வேளை நாங்கள் நேரில் போனால் கூட இவ்வாறு பார்ப்போமா என்று தெரியவில்லை..
பவித்ரா