மையநிலப்பயணம் கடிதங்கள்

mayil

 

ஜெ வணக்கம்

படேஸவர் ஆலய தொகுதி பற்றிய குறிப்பு படித்தவுடன் பெறும் வருத்தம் ஏறபட்டது.

பெரு நாட்டில் மாச்சூ பிச்சு (15ஆம் நூற்றாண்டு) நகரத்தை விட பல நூற்றாண்டுகள் புராணமான இடம் கவனிப்பற்று இருக்கிறது.

ஃப்ரண்ட் லைன் பத்திரிக்கையில், திரு முகம்மது அவர்களின் பேட்டி (http://www.frontline.in/static/html/fl2702/stories/20100129270212200.htm) ஒன்று உள்ளது. நில நடுக்கத்தில் பெரும்பாலும் அனைத்து கோயில்களும் தகர்ந்து விட்டனவாம். அந்த இடமே கற்களின் குவியலாக இருந்ததாம். சுல்தான்களால் அழிக்க பட வில்லை என்கிறார்.

ஆச்சரியமான தகவல், இப்பொழுது இருக்கும் கட்டமைப்பு தொல்லியல் துறையினால் ஒவ்வொரு கற்களாக கொண்டு மீண்டும் கட்டி எழுப்ப பட்டது என்கிறார். அவர் மனஸர ஷில்ப சாஸத்ரா (4 நூற்றாண்டு), மாயமதா வாஸ்து சாஸ்த்ரா (7 நூற்றாண்டு) என்ற சமஸ்கிருத நூல்களில் தேர்ச்சி பெற்றவராம். அந்த நூல்களின் அடிப்படையில் மீண்டும் இந்த கோயில்களை் கட்டினாராம். கட்டுவது என்றால் கற் குவியலில் இருந்து ஒவ்வொரு கற்களாக பொறுக்கி திரும்பவும் அடுக்கவது.

அந்த பேட்டியிலேயே முகம்மதுவின் முயற்சிக்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்தது என்று புகைபடம் உள்ளது. அடையாளமே தெரியவில்லை.

வருத்தமாக இருந்தாலும், முகம்மது போன்ற கையளவு நபர்கள் இந்த மக்கள் கடலில் இருந்து வந்து கொண்டிருந்தாலே பல நல்ல மாற்றங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அன்புடன்

சதீஷ் கணேசன்

***

k

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

அந்தக்கால கொடூர கொள்ளையர்களிடமிருந்து கூட அரும்பாடுபட்டு ஆலயங்களை மீட்டு பாதுகாக்க ‘கே.கே.முகம்மது’ அவர்களால் முடிந்தது.ஆனால் இந்த ‘கற்(தற்)கால கொள்ளையர்களிடமிருந்து’ மீளமுடியவில்லை!.இந்தப் பகுதியின் பலப்பல பாழ்படுத்தப்பட்ட ஆலயங்களை மீட்டு பாதுகாத்தவர் ‘கே.கே.முகம்மது’ என்பதில் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் காலத்தின் ‘நரன்முகையும்’ அப்பட்டமாகத் தெரிகிறது!.

அன்புடன்,

அ .சேஷகிரி.

****

முந்தைய கட்டுரைஅயினிப்புளிக்கறி கடிதம்
அடுத்த கட்டுரைநாராயண குரு எனும் இயக்கம்-2