அயனிப்புளிக்கறி பற்றி…

KJAgmail

 

ஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போலசித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்துக் கொள்வேன். முன்பு சுஜாதாஎழுதிய ஒரு சிறுகதை குறும்படம் பார்த்த காட்சிகள்போல் என் மனதில் எழுந்ததுண்டு. (பின்னர் குறும்படமாகவும் வெளிவந்தது). தி.ஜானகிராமன் எழுதிய காண்டாமணி என்னும்சிறுகதையும் அப்படியான கதைதான். தி.ஜா.வின் பல கதைகள் அப்படியானவைகள் என்றுநினைக்கிறேன். ஆசிரியன் முற்றிலும் விலகி தன் மைய நோக்கத்தை பாத்திரத்தின்வாழியாகவே சொல்லிவிடுவது. வெறும் உரையாடல்களால் அல்ல, ஆசிரியரின்கூற்றுகளாலும் அல்ல, சில மெளனங்களாலும் ஒரு பார்வையாலும், சின்ன கோபத்தாலும்அதை செய்ய முடிவது என்பது எல்லா கதைகளிலும் சாத்தியம் இல்லை தான். ஜெயமோகன்எழுதி தினமணி திபாவளி’17 மலரில் வெளியான அயினிப்புளிக்கறி அப்படியான ஒரு கதை.

அயனிப்புளிக்கறி பற்றி கே ஜே அசோக் குமார்

***

 

முந்தைய கட்டுரைஎஸ்.பொ.வின் கலை- நோயல் நடேசன்
அடுத்த கட்டுரைஇலக்கிய முன்னோடிகளின் தடங்கள்…