எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின் பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல் …..கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில் அதன் காணொளியைச் சொடுக்கி அவரின் சிலிர்ப்பை நானும் கொஞ்சம் கடன் வாங்கிச் சிலிர்த்துக் கொண்டேன். அந்தப் பாட்டில் வரும் விரக வேதனையை என்னாலும் உணர முடிந்தது.