பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் மையநிலப்பயண இன்றைய சித்திரத்தில் மூன்று பகுதிகள் என்னைக் கவர்ந்தன. ஓன்று தேவியின் பெரிய உடைந்த பாதமும் அதன் மேல் பூஜைக்குறியீடாக ஒரு மலரும் மனத்தை எங்கேயோ இழுத்து சென்று ஏக்க பெருமூச்சை விடச்செய்தது!.ஒரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ‘புண்டேல்கண்ட் அரசர்கள் அக்பர் காலகட்டத்திலேயே முகலாயர்களுடன் சமரசம் செய்துகொண்டதால் அவர்களின் அரண்மனை முகலாயர் அரசர்களால் இடிபடாமல் தப்பியதாக’.ஆனால் அந்தக் ‘கொடுப்பினை’ அங்குள்ள ஆலயங்களுக்கும்,சிலைகளுக்கும் இல்லை போலும்!.இரண்டாவது எங்களூர்காரர் செல்வேந்திரன் (சாத்தான்குளம்)கூறியது…’“பொண்ணப்பெத்தவன் அனாதை இல்லை ஜெ. அங்க பாருங்க, அதுக்கு மட்டும்தான் அப்டி தோணுது. அவனுக்கு ஒரு கை சோறு எப்பவும் உண்டு” என்றார்.” உங்கள் எழுத்தின் சாயலை அதில் பார்த்தேன்!.மூன்றாவது,முதல் புகைப்படத்தில் உள்ள துணுக்குறச்செய்யும் கோபுரத்தின் இடுக்கில் தளிர் விடும்‘ஆலிலைச்செடி‘.கண்டுக்காமல் விட்டால் போதும் நாளடைவில் ‘முகலாயர்களின் வேலையை’ சத்தமில்லாமல் இது பார்த்துவிடும்!
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள ஜெ
மையநிலப்பயணம் கட்டுரைத்தொடர் உங்கள் பயணக்கட்டுரைகளில் இருக்கும் நுண்ணிய கவனிப்புகளும் அழகிய உவமைகளும் கொண்டு நிறைந்திருக்கிறது. பலநாட்கள் நீண்டுசெல்லும் பயணம் எப்படி ஒரே கனவுவெளியில் சுழன்று வருவதாக அமைந்துவிடுகிறது என்பதும் சரி ஒரே வீச்சில் மத்தியப்பிரதேசத்தின் பொருளியல் பரிணாமத்தை வெளி அவதானிப்புகள் வழியாகவே சொல்லிச்செல்வதும் சரி அற்புதமானவை
வாழ்த்துக்கள்
ஸ்ரீதர்