மதிப்பிற்குரிய ஜெ,
நீங்கள் எனது விருப்பத்தை உங்கள் தளத்தில் பதிவிட்ட பிறகு பல நண்பர்கள் உங்கள் தளம் மூலமாகவும் மற்றும் நேரிடையாகவும் என்னை தொடர்பு கொண்டு புத்தக அட்டவணையை பகிர்ந்து கொண்டார்கள். நண்பர் வேணுவும் நானும் அவர்களின் பரிந்துரைகளை அட்டவணை படுத்த ஆரம்பித்துள்ளோம். எனது விருப்பம், நாம் இந்த புத்தகங்களை வாசிப்பு திறன் (வயது) வாரியாக பிரிக்க வேண்டும். ஆரம்ப பள்ளி ஆசிரியர்களோ அல்லது குழந்தை புத்தக எழுத்தாளர்களோ இதற்கு உதவினால் நன்றாக இருக்கும்.
இப்படி நம்மால் வாசிப்பு திறன் வாரியாக பிரிக்க முடியுமானால் அது அனைத்து அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அமெரிக்காவில் இருக்கும் தமிழ் பள்ளிகள் அந்த புத்தகங்களை வாங்கி நூலகம் அமைக்க ஏதுவாக இருக்கும்.
சில நண்பர்கள் தமிழ் பதிப்பகங்கள் பதிப்பித்த ஆங்கில புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளார்கள். நமக்கு தமிழ் கதை புத்தகங்களே தேவை.
இத்துடன் நான் அட்டவணையை இணைத்துள்ளேன். யார் வேண்டுமானாலும் இந்த அட்டவணையில் அவர்களது பரிந்துரைகளை செய்யமுடியும். நம்மால் கூட்டாக இந்த அட்டவணையை முழுமை செய்ய முடியும் என்றே நம்புகிறேன்.
https://docs.google.com/spreadsheets/d/15d8ucuDLa_MX1VEc1KRfVGmEZbfQNnRBXCBW3_mtYZ0/edit?usp=sharing
இந்த மடலுடன் நான், யாரெல்லாம் இந்த அட்டவணைக்கு உதவினர்களோ அவர்களையும் இணைத்துள்ளேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
I don’t have the email ids of those who shared book list directly thru your website. Karthick, Mangai & Prabhu. If someone could add them in to this email thread, we can work as a team.
http://www.childrensbooktrust.com/ have only Hindi \ English books
http://www.nbtindia.gov.in/ has tamil books but they are not specifically for children.
ஸ்ரீராம் காமேஸ்வரன்
***