சென்னை தீபாவளி

1

நேற்று தீபாவளி. துபாயிலிருந்து நேராகவே சென்னை வந்துவிட்டேன். சினிமா விவாதம். பகல் முழுக்க கிரீன் பார்க்  அறையில் அமர்ந்து வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். வெளியே ஓர் உலகிருப்பதே தெரியாது. மத்யப்பிரதேசப்பயணத்திற்கு முன் வெண்முரசு பல அத்தியாயங்கள் முன்னால் சென்றாகவேண்டிய கட்டாயம்.

மாலையில் ராஜகோபாலன் வீட்டுக்குத் தீபாவளிக்குச் செல்லலாம் என்று சௌந்தர் சொன்னார். நண்பர்கள் அனைவரும் அங்கே கூடலாம் என்று. சுரேஷ் பாபுவும் காளிப்பிரசாத்தும் வந்து அழைத்துச்சென்றனர். நாளிதழ்களில் பட்டாசுப் புகையால் சூழியல் பாதிப்பு என்றெல்லாம் வாசிக்கும்போது இத்தனை வண்டிகளால் உருவாகாத புகையா, ரொம்பதான் சொல்கிறார்கள் என நினைப்பேன். ஆனால் சென்னையை தீபாவளி இரவில் பார்த்தபோது பீதியாக இருந்தது. உண்மையிலேயே சிரியா லெபனான் தெருக்களில் சென்றுகொண்டிருக்கும் அனுபவம். எங்குபார்த்தாலும் புகைமூட்டம். வெடியோசை

3

சௌந்தரின் குரு சுவாமி பரம்பிரியானந்தா ஹரித்வாரில் இருந்து வந்திருக்கிறார். மூன்றுநாட்கள் வேதாந்த வகுப்புகள் நடத்தவிருக்கிறார். அவரும் எங்களுடன் வந்தார். ராஜகோபாலனின் வீட்டில் அருணாச்சலம் மகராஜன், அவர் மனைவி, சௌந்தர், அவர்மனைவி, குழந்தைகள் வந்திருந்தனர். ரவிக்குமாருக்குத் தலைத்தீபாவளி. மனைவி கருவுற்றிருந்தமையால் அவர் மட்டும்தான் வந்தார்

உற்சாகமான ஒரு மாலை. ராஜகோபாலன் எடுத்துத்தந்த வெள்ளைவேட்டி சட்டையை தீபாவளி ஆடையாக அணிந்துகொண்டேன். விருந்துண்டு இரவு பன்னிரண்டு மணிக்குத் திரும்பி வந்தேன். சற்றே முதுகை நிமிர்த்திவிட்டு மீண்டும் வெண்முரசு.

முந்தைய கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37